Views 1,502,820 

தீபஷ்வினியின் "வளைக...
 
Notifications
Clear all

தீபஷ்வினியின் "வளைகாப்பு"


(@deepashvini)
꧁எழுத்தாளர்꧁᭄ Admin
Joined: 2 years ago
Posts: 855
Topic starter  

தீபஷ்வினியின்

"வளைகாப்பு" 

"எனக்கு அதெல்லாம் தெரியாது, இந்த விசேஷத்துக்கு அவங்க வரக்கூடாதுன்னா வரக்கூடாது தான்" என்று திட்டவட்டமாக மறுத்தாள் ராதிகா

 

மனைவியின் கை பிடித்து தன் முகம் பார்க்க செய்த விஜய், "இங்க பாரு ராதி, அவங்க எனக்கு அண்ணி மட்டும் இல்ல அம்மா மாதிரி, அவங்க உன்னோட வளைகாப்புக்கு வர கூடாதுனு சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல,  இந்த குழந்தை இந்த வீட்டு வாரிசு அவங்களுக்கும் முழு உரிமை இருக்கு" என்று அவன் சற்று கடுமையாக கூறவும்

 

கணவனை முறைத்த ராதிகா, "என் பேச்சை கேக்க மாட்டீங்கல்ல. அப்போ நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன், இனி கொஞ்ச நேரம் கூட இங்க இருக்க மாட்டேன்…"  

 

"என்னடி எதுகெடுத்தாலும் இதையே சொல்லி மிரட்டுறே, நீ இங்க இருக்கணும்னு அவசியமே இல்ல இன்னைக்கு நானே சொல்றேன் நீ உங்க வீட்டுக்கே கிளம்பலாம்" என்று கோபத்தில் கூறிய விஜய் மனைவியை வாசலை நோக்கி தள்ளி விட்டான்

 

"அம்மா" என்று தன் நிறைமாத வயிற்றை பிடித்து கொண்டு,  கிழே விழ போனாள் ராதிகா, ஆனால் மகளை பார்க்க சந்தோசமாக வந்த அவளின் அன்னை "ராதி" என்று பதறி ஓடிவந்து அவளை பிடித்து கொண்டார்

 

அன்னையை பார்த்ததும் "அம்மா"  என்று அழுத ராதிகா அவரின் தோள் சாய்ந்து கொண்டாள்… 

 

மகளை அனைத்து கொண்டவர், "என்ன மாப்ள  இது நிறைமாசமா இருக்கிற புள்ளைய இப்படியா தள்ளி விடுவிங்க" என்றவரின்  குரல் அவனை குற்றம் சாட்டியது..

 

விஜய்க்கும் தான் செய்த தவறு புரிந்தது, ஆனாலும் ராதிகாவின் பேச்சு அதை புறம் தள்ளியது…  "இங்க பாருங்க அத்தை, இவ்வளவு நாளா எங்க அண்ணிக்கு குழந்தை இல்லன்னு அவங்ககிட்டேயே குத்தி காட்டிக்கிட்டு இருந்தா. 

 

நான் திட்ட நினைச்சா கூட அண்ணி   இவளை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டாங்க அண்ணிக்காக தான்    ரொம்பவே பொறுமையா இருந்தேன், ஆனா இன்னைக்கு இவ பேச்சு எல்லை மீறி போயிடுச்சு, நானும் எவ்ளோ நாள் தான் பொறுத்துக்குவேன், ஒன்னு இவளுக்கு நல்லா புத்திமதி சொல்லுங்க, இல்லையா உங்க கூடவே கூட்டிட்டு போயிருங்க, இவ குத்தல் இல்லாம    எங்க அண்ணி நிம்மதியா இருப்பாங்க" என்றவன் அதற்கு மேலும் அங்கு நில்லாமல் வெளியே சென்று விட்டான்..

 

மகளை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்த ராதிகாவின் அன்னை அவளை சோபாவில் அமர வைத்துவிட்டு அங்கு டைனிங் டேபிளில் ஜக்கில் இருந்த நீரை எடுத்து மகளுக்கு குடிக்க கொடுத்தார், அவள் குடித்து முடிக்கவும். . 

 

"ராதிமா மாப்பிள்ளை சொல்றது எல்லாம் உண்மையா  நீ அப்படி சொன்னியாடா" என்று சற்று தன்மையாகவே கேட்டார்

 

"ஆமாம்மா அப்படி தான் சொன்னேன், பின்ன என்னமா அவங்களுக்கு கல்யாணம் ஆகி எட்டு  வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்ல அவங்க எனக்கு வளையல் பூட்டினா, என் குழந்தைக்கு ஏதாவது ஆகிடும்.  அதான் என் வளைகாப்புக்கு அவங்க வர கூடாதுன்னு சொல்லிட்டேன் அதுல எனக்கு எந்த தப்பும் இருக்கிறதா எனக்கு தெரியலமா…" என்று தன் பிடிவாதத்தை விடாமல் ராதிகா கூறவும்

 

மகளை தீர்க்கமாக பார்த்த அவளின் அன்னை

"அப்போ நாணுமே உனக்கு வளையல் பூட்ட வர மாட்டேன் ராதி"  என்றார்

 

அதிர்ந்த மகள், "அம்மா அவங்களை சொன்னா அவருக்கு தான் கோபம் வருதுன்னா, உங்களுக்கு என்னாச்சு, நீங்களும் அவங்களும் ஒண்ணா?"  என்று அவள் கேட்டு முடிக்க வில்லை..

 

அதற்கு அவர் கூறியதை கேட்டு நெஞ்சு அதிர "அம்மா" என்று ஸ்தம்பித்தாள்  ராதிகா…

 

"ஆமா ராதி நீ எங்களுக்கு தத்து பொண்ணு , கிட்டத்தட்ட ஒன்பது  வருசமா குழந்தை இல்லாத நாங்க உன்னை தத்து எடுத்து வளர்த்து கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கோம், எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த விஷயம் உனக்கு தெரிய கூடாதுன்னு சொந்த ஊரை விட்டு வெளியேறி வேற ஊருக்கு வந்தோம், ஆனா உன் வாயில் இருந்து இன்னொரு பெண்ணை அப்படி சொல்லுவேனு நான் எதிர் பார்க்கல, இப்ப சொல்லு நாணுமே உன் பார்வையில்"  என்று மேற்கொண்டு ஏதோ கூற போனவரின் வாயை பொத்திய ராதிகா, 

 

"வேணாம்மா ப்ளீஸ் எதுவும் சொல்லிராதீங்க என்னைக்கும்  நீஙக தான் எனக்கு அம்மா 

நான் தான் உங்களுக்கு பொண்ணு. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். இப்ப என் தப்பை நான் உணர்ந்துட்டேன். அவர் வந்ததும் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவங்க அண்ணிகிட்டையும் மன்னிப்பு கேட்க போறேன்மா"  என்று கதறி அழுதாள் ராதிகா

 

சிறிது நேரம் கழித்து மகளை சமாதானம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் அவர்..   அவர் வெளியே வரவும் அவரை எதிர் கொண்டான் விஜய். 

 

அவனை பார்த்ததும்  "மாப்ள இனி என் பொண்ணு கண்டிப்பா ஒரு நல்ல மருமகளா நடந்துபா, அதுக்கு நான் உத்தரவாதம்" என்று கூறவும்

 

"ரொம்ப தேங்க்ஸ் அத்தை" என்றவன்  "அப்படி என்ன சொன்னிங்க…?" அவனுக்கு ஆர்வம் தாங்கவில்லை… 

 

லேசாக சிரித்தவர், "எனக்கு என் பொண்ணு வாழ்க்கை ரொம்ப முக்கியம் அதுக்காக   அவ கிட்ட ஒரு சின்ன பொய் சொன்னேன் மாப்ள அது நல்லாவே வேலை செய்யுது…" என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்..

*****


Quote
Share:
6
6