Views 1,502,844
காதல்..
"சுபா என்னடி இவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்டே…" என்று கேட்டுக்கொண்டே குளியல் அறைக்குள் புக போன மாலினி,
"ஹேய் எஸ் எஸ் இன்னைக்கு தானே சிவா கிட்ட லவ் சொல்ல போறேன்னு சொல்லிட்டு இருந்தே ம்பச் மறந்தே போய்ட்டேன்டி…" என்ற மாலினி, "ஈவினிங் வந்ததும் என்ன ரிசல்ட்னு மறக்காமல் சொல்லிருடி ரொம்ப ஆவலா இருக்கேன்…" என்றுவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள.
லேசாக புன்னகையை சிந்திய சுபா தனது தோள் பையயை எடுத்து கொண்டு அலுவலகம் கிளம்பினாள்…
மாலை ஹாஸ்டலுக்கு சீக்கிரமே வந்து விட்ட சுபா தனது டைரியில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தாள்… அப்பொழுது அறைக்குள் நுழைந்த மாலினி சுபாவை பின்னால் இருந்து இறுக கட்டி கொண்டு
"என்னடி நீ போன காரியம் என்னாச்சு சக்ஸஸ் தானே? சிவா என்ன சொன்னார் ஓகே சொல்லிட்டாரா?" என்று ஒருவித ஆர்வதுடன் கேட்டாள்…
தோழியின் கன்னத்தை வருடி கொடுத்த சுபா "அவங்க லவ் ஏத்துகிட்டாங்க மாலு , ஆக்சுவலி அவங்களுக்கும் விருப்பம் தானாம், எப்படி சொல்லன்னு தான் கொஞ்சம் தயக்கம் இருந்ததாம். நாளைக்கு மெரினா பீச்சில் மீட் பண்ண சொன்னாங்க…" என்று அவள் கூறி முடிக்கவில்லை
"ஒஹ் காட்!!! , ஒஹ் மை காட்!!! நிஜமாதான் சொல்றியா சுபா!!!, நான் இதை எதிர் பார்க்கவே இல்லடி!!!. சிவா என்ன சொல்லுவாரோன்னு திக்கு திக்குன்னு தான் இருந்தது. அதான் உன் கிட்ட ஹெல்ப் கேட்டேன். இப்ப மீ எவ்ளோ ஹேப்பி தெரியுமா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டி நாளைக்கு நான் சீக்கிரமா மெரினா பீச்க்கு போறேன் என்னோட சிவாவை சந்திக்க…" என்று காதலுடன் கூறிய மாலினி தன் காதல் கை கூடிய சந்தோஷத்தில் அன்று விவைவாக தூங்கிவிட…
சுபாவோ "சிவாவின் மேல் தான் வைத்த காதல் ஒருதலை காதலாகவே முடிந்து விட்டதை நினைத்து கண்ணில் கண்ணீர் வழிய மீண்டும் டைரியில் கிறுக்க ஆரம்பித்தாள் சுபா…
******