Views 1,502,748
மோகனா கார்த்திக்கின்,
"கொஞ்சம் கனவுகள் கொஞ்சும் நினைவுகள்…"
ௐ சாய்ராம்
"பிரபுஊஊஊ…" என்று மனதை மயக்கும் தேன் குரல் கேட்டு இதயம் படபடக்க, சட்டென திருப்பி பார்த்தான் பிரபு.
கண்களுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் காரிருள் சூழ்ந்திருக்க, அந்த தேன்குரலுக்கு சொந்தக்காரியான தேவதையின் மதிமுகம் காண ஆவல் கொண்ட பிரபு, தன் கண்களை நாலாபுறமும் அலைபாய விட்டான்… எங்கு தேடியும் அந்த தேவதையின் மதிமுகம் தெரியாததால் அவன் மனம் சுணக்கம் கொண்டதில் அவனது முகமும் கூம்பி போனது…
அவனது முகவாட்டம் அவனது தேவதைக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, அதுவரை இருளில் அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தவள் தன்னை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பொருட்டு தன் கையில் வைத்திருந்த மெழுகுவர்த்தியை ஔியூட்டினாள்…
இருளின் கருமையில் ஔியின் துணையுடன் தேவதையாய் காட்சி தந்த தன்னவளை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான் பிரபு… அவளை அணைத்து தனது கரைகாணா காதலை அவளிடம் காட்ட அவன் மனம் துடித்தாலும், பாவையவளின் மனதை அறிந்திடாமல் தன் சுண்டுவிரல் கூட அவள்மீது படக்கூடாது என நினைத்து தனது தேவதையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபு.(அவ்ளோ நல்லவனாடா நீ)
பிரபுவின் கண்ணில் தெரிந்த ஏக்கத்தை கண்டுகொண்டவளோ, தனது ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி "பிரபுஊஊஊ…"
என அழைத்ததோடு மட்டுமல்லாமல் ஆள்காட்டி விரலை அவனை நோக்கி பின்பு மடித்து "வா…" என்பது போல் அவனை அழைத்தாள்…
தன்னவளின் அழைப்பிலும், அவளது ஹஸ்கி குரலும் கேட்டு பிரபுவின் கண்கள் மின்னினாலும், அவனது ஏழாவது அறிவு அவனுக்கு எச்சரிக்கை மணி அடித்து நிதர்சனத்தை உணர்ந்த சற்று நிதானித்தான்.
முதலில் அவள் அழைப்பது தன்னைத்தானா இல்லை வேறு யாராவதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும் பொருட்டு தனக்கு பின்னால் சுற்றும் முற்றும் பார்த்தான்… அவனது செயல் பெண்ணவளுக்கு சிரிப்பை வரவழைக்க கிண்கிணி நாதமாய் சிரிப்பொலி எழுப்பினாள்...
அதில் தன்னை மறந்து அவளது சிரிப்பை ரசித்து பார்த்தவனை முன்பு போல் ஆட்காட்டி விரலை நீட்டி "உங்களைத்தான் கூப்பிட்டேன்… கிட்ட வாங்க பிரபு …" என்றாள்.
மீண்டும் அவனது ஏழாவது அறிவு எச்சரிக்கை மணி அடிக்க, அவனோ இப்பொழுது அதை கண்டுகொள்ளாமல், "அமுல் பேபி… " என அவளுக்கு குறையாத காதலுடன் முணுமுணுத்தவன் நொடியும் தாமதிக்காமல் அவளை நோக்கி சென்றான்.
ஓர்வித எதிர்பார்ப்புடன் தன்னை நெருங்கி நின்றவனின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அவனது முகத்தை வலது கையால் தாங்கி பிடித்தவள், "ஐ லவ் யூ பிரபு…" என்றாள்…
இந்த வார்த்தையைக் கேட்க எத்தனை நாட்கள் தன் தூக்கத்தை தொலைத்து தவம் இருந்திருப்பான் பிரபு… இன்று அந்த வார்த்தையை கேட்டதும் ஆகாயத்தில் பறப்பதைப் போல் உணர்ந்தான்… இருந்தும் தான் காதால் கேட்ட வார்த்தைகள் நிஜம்தானா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும் பொருட்டு, "என்னால நம்ப முடியல அமுல் பேபி…!" என்றான்.
காதலனின் மனதை சரியாக படித்த அவனின் காதலியோ, "என் காதலை எப்படி உணர்த்தினா உங்களுக்கு புரியும் பிரபு…" என்று கேட்டாள்.
பிரபுவோ இதுதான் சாக்கென்று, "என்னை கிஸ் பண்ணி உன் காதலை நிரூபி அமுல்பேபி…!" என்றான் மயக்கத்துடன்,
அதைக் கேட்டு அவளது முகம் சிவந்தாலும், தனது காதலை அவன் கேட்ட வழியில் நிரூபிக்கும் பொருட்டு அவனை நெருங்கி நின்றவள், கால் கட்டைவிரலை ஊன்றி அவனது உயரத்துக்கு எம்ப முயன்றாள்…
அந்தோ பரிதாபம் அவளால் முடியவில்லை… பாவமாக அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க, பிரபுவோ கள்ள சிரிப்புடன் குறுகுறுவென்று அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையில் அவளுக்கு வெட்கம் வந்தாலும் வெளியே அவனை முறைத்து பார்க்க, பிரபுவோ அவளை மேலும் சோதிக்க விரும்பாமல் அவள் உயரத்திற்கு தன் தலையை சற்று தாழ்த்தினான்…
இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது காதலை வெளிபடுத்த, அதே நேரம் இருவரின் இதழ்களும் ஒன்றோடு ஒன்று உரசும் நெருக்கத்திற்கு வந்திருந்தது.
தன்னவளின் இதழ் தீண்டலை எதிர்பார்த்து அவன் காத்திருக்க… அவள் அவனது இதழ்தீண்டும் நேரம்,
"வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு…"
என்ற பாடல் மிகுந்த சத்தத்துடன் பிரபுவின் மொபைலில் இருந்து ஒலிக்க, அதுவரை கனவுலகத்தில் தன்னவளின் இதழ் தீண்டலுக்காக காத்திருந்த பிரபு, திடீரென்று கேட்ட சத்தத்தில் அடித்து பிடித்து அலறி எழுந்தவனின் உடல் குப்பென்று வியர்ந்து வியர்வையில் நனைந்திருந்தது.
ம்க்கும்.. அவ லவ்வு தெரியாம இவரு சுண்டுவிரலைகூட தொட மாட்டாராமா? 😓
தொட்டிருந்தா அப்பவே தெளிஞ்சிருக்கும்..
இப்படி ஏடாகூடாமான இடத்துலயா தெளியனும் 🤭 🤭 🤭
நல்ல சீனை கலைக்க ஏழாவது அறிவு வேற😒😒
கிஸ்ஸு போச்சே 😋 😋
பாட்டை பாரு..
வேணாம் மச்சான் வேணா பொண்ணுக காதலா😓😓
நீ கடைசிவரை முரட்டு சிங்கிள்தான்டா😏
லவ்லி டீசர் மோகிமா😍😍😘
Ada kanava?nice teaser mam