Views 1,502,946 

Notifications
Clear all

கனவு 4


(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

ஹாய் ஹாய் நட்பூஸ்

இதோ "கொஞ்சம் கனவுகள்...! கொஞ்சும் நினைவுகள்...!"  கதையின் 4 வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்...

படிச்சிட்டு எப்படி இருந்ததுன்னு என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... 🙈🙈🙈

போன அத்தியாயத்திற்கு லய்க்ஸ் அன கமென்ட் பண்ண அனைத்து நட்புகளுக்கும் லவ் யூ😍😍😍

என்றும் அன்புடன்
உங்களா
மோகனா கார்த்திக்😘😘😘

 

கனவு 4

 

ஓம் சாய் ராம்

 

சென்னை டொமஸ்டிக் விமான நிலையத்தின் வாசலில் முன்னே கேப் ஒன்று வந்து நிற்க அதில் இருந்து இறங்கினார்கள்  நந்தினி, ரஞ்சனி மற்றும் ஆதவன்… 

 

தாங்கள் செல்ல வேண்டிய விமான பயணசீட்டை காண்பிக்க, அவர்கள் வழிகாட்டிய  கவுண்டரில் நின்றுக் கொண்டு  வழக்கமாக செய்யும்  பார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்துக் கொண்டவர்கள், விமானத்தில் ஏறி தங்களுக்கான இருக்கையில் அமர்ந்துக் கொண்டார்கள்… 

 

மூன்று இருக்கைகள் கொண்ட இடத்தில் ஆதவன் நடுநாயகமாக அமர்ந்திருக்க, அவனின் இருமருங்கிலும் நந்தினியும் ரஞ்சனியும் அமர்ந்துக் கொண்டார்கள்… ஆதவனை பொறுத்தவரை இது அவனது முதல் விமான பயணம்… இந்த பயணத்தில் அவன் எப்படி நடந்துக் கொள்வான் என்று தெரியாமல்  நந்தினி சற்று யோசனையுடனே  இருந்தாள்… காரணம்  ஆதவனுக்கு சிறு சத்தம் கேட்டாலோ இல்லை இருக்கும் சூழ்நிலை அசௌகரியமாக உணர்ந்தாலே  உடனே காதை மூடிக் கொண்டு அலறி தன் விருப்பமின்மையை தெரிவித்துவிடுவான்… அச்சமயத்தில் அவனை சமாதானம் செய்வது சிறிது கடினம்… 

 

வீட்டிலோ  இல்லை பொதுஇடங்கள் என்றாலோ நந்தினி ஓரளவு சமாளித்துவிடுவாள்… ஆனால் இரண்டு  மணிநேர விமானபயணத்தில் அவனை ஓரிடத்தில் நிறுத்தி வைப்பது என்பது முடியாத காரியம் என்பதால், அவனை எப்படி சமாளிப்பது என்ற  யோசனையுடனே இருந்தாள்… இதற்குதான் இரயிலில்  தாங்கள் வருவதாக அன்றே ராஜேஷிடம் அவள் கூற, அவனோ திட்டவட்டமாக மறுத்துவிட்டான்… 

 

ரஞ்சனியின் அலுவலகம் சென்று கையோடு அவளது சம்மதத்தை பெற்றுக் கொண்டவன், அவனது வேலைகளை முடித்துக் கொண்டு மாலை நந்தினியின் அப்பார்மெண்டிற்கு சென்று அவளையும் சந்தித்தான்… 

 

ரஞ்சனி வளைகாப்பு விழாவிற்கு வரும் விஷயத்தை கூறியவன், அவர்கள் மூவரையும் விழாவிற்கு இரண்டுநாள் முன்பே வந்து தங்கள் வீட்டில் தங்குமாறு கோரிக்கை வைக்க, நந்தினி பேசும்முன்  அந்நேரம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரஞ்சனியோ, வேண்டாம் என மறுத்துவிட்டாள்… 

 

ஒருநாள் முன்பாவது வந்து தங்கள் வீட்டில் தங்குமாறு அவன் கேட்க, இந்த முறை நந்தினியே ஹோட்டலில் தங்கிக் கொள்கிறோம் என கூறி வேண்டாம் என மறுத்துவிட்டாள். மேலும் அவர்களிடம் விவாதம் பண்ண விரும்பாதவன், பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு விமானத்தில் அவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்ய, அதற்கு மேல் மறுக்க தோன்றவில்லை அவர்களுக்கு… ஏனெனில் இருவருமே  ஆதியின் நிலையை நினைத்து யோசித்தார்களே தவிர, தங்கையின் மீதிருந்த வருத்தத்தினால் அல்ல… மனம் திருந்தி மன்னிப்பு யாசிப்பவளிடம், அவர்களாலும் தங்களது ஒதுக்கத்தை காட்டமுடியவில்லை… 

 

நள்ளிரவுதான் அவன் விமானத்தில் சென்னை செல்வதாக இருந்ததால், அன்று மாலை மனைவிக்காக ஷாப்பிங் செய்யபோவதாக கூறி அவர்களையும் துணைக்கு  அழைக்க, இருவரும் தயங்காமல் சென்றனர்… ஏனெனில் தங்கைக்கு அவர்களும்  சீர் செய்ய வேண்டும் அல்லவா… அதனால் அவனுடன் சென்று கையோடு தங்கைக்கு புடவை வாங்கி வந்துவிடலாம் என எண்ணி அவனுடன் சென்றவர்கள், ஷாப்பிங் முடிந்து  இரவு உணவை அங்கிருந்த ஓர் ஹோட்டலில் முடித்துக் கொள்ள, அன்று இரவே சென்னை புறப்பட்டு சென்றுவிட்டான் ராஜேஷ்… 

 

இதோ அவன் ஆசைக்கிணங்க மூவரும் சென்னை நோக்கி விமானத்தில் பயணிக்க இருக்கிறார்கள்… நந்தினி ஆதவனை பற்றி நினைத்துக் கொண்டிருக்க,  ரஞ்சனிக்கோ எந்த கவலையும் இல்லை போலும்…  தன் தம்பியுடன் சேர்ந்து தனது மொபைலில்  கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்… 

 

சிறிது நேரத்தில் விமானம் கிளம்ப போவதாக பைலட்  அறிவிக்க,  "ஆதி சீட் பெல்ட் போட்டுக்கோ…" என்றவள்  "இதோ இப்படித்தான்…  " என்றபடி அதன்  செய்முறையும்  காட்டினாள்…  

 

அதை பார்த்து ஆதவன் தனது  சீட் பெல்ட்டை  போட்டுக் கொண்டதும், "பிளைட் கிளம்ப போகுது ஆதி … இந்த சமயத்துல நாம  கேம் விளையாட கூடாது… சோ நாம பாட்டு கேட்கலாம்…" என்றவள், தனது மொபைலை ஏரோப்பிளேன் மோடில் போட்டுவிட்டு, இயர் போனின் ஒரு முனையை ஆதியின் இடது காதில் சொருகியவள், மற்றொரு முனையை தனது வலது காதில் சொருகியபடி, அவனுடன் சேர்ந்து சிறுகுழந்தையாய் மாறி பாட்டுக் கேட்டுக் கொண்டே அவனது கவனத்தை இசையின் மூலம் திருப்பிவிட, மற்ற எந்த ஒலியும் அவன் செவியை தீண்டாமல் போனது…  

 

தங்கையின் சாமர்த்திய செயலைக் கண்டு மெல்லிய புன்னகை எட்டிபார்த்தது நந்தினிக்கு… இந்த யோசனை தனக்கு ஏன் தோன்றவில்லை என்று அவள் எண்ண, அவளது மனசாட்சியோ, "நீ நீயாக இருந்திருந்தால் இந்த சிறுசெயலை நீயே செய்திருப்பாய்… ஆனால் உன் மனம்தான் குழம்பி தவிக்கிறதே… அதனால் வந்த தடுமாற்றம்தான்…" என உண்மையை அப்பட்டமாக எடுத்துரைக்க, சற்று திணறித்தான் போனாள் அவள்… 

 

திடீரென சிரிப்பு சத்தம் கேட்க, திரும்பி பார்த்தாள்… தனது அருகில் தம்பியும் தங்கையும் தனி உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு ஏதோ பேசி சிரித்துக் கொண்டும்… தலையை ஆட்டி ஆட்டி  காதில் கேட்ட பாடலை ரசித்துக் கொண்டும் இருப்பதைக் கண்டு, தானும் ஆதியைப்  போல் சிறு குழந்தையாக மாறிவிட மாட்டோமா என அவளது  மனம் ஏக்கம் கொண்டது… 

 

அதே சமயம் வாழ்க்கையை அதன்போக்கில் வாழவேண்டும் என்ற கொள்கையுடன்  எந்தவித கவலையும் இல்லாமல், இலகுவாக எதிர்காலத்தை எதிர்கொள்ளும் தனது தங்கையை போல் அல்லாமல், தான் தான் முடிந்து போனதை நினைத்து  தனது வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்கிறோமோ என்ற சந்தேகமும் அவள் மனதில் எழுந்தது…  

 

அவளுக்கு தெரியாதே, தங்கையின்  மனதிற்குள்ளும் ஓர் ரகசியம் மறைந்து இருக்கிறது என்று… அதை யாரிடமும் வெளிகாட்ட விரும்பாமல்  அவள் உள்ளுக்குள் தவிக்கும் தவிப்பு ரஞ்சனி  மட்டுமே அறிவாள்…  

 

எதிர்காலம் என்றதும் இப்பொழுது அவளது நினைவு ஓவியனிடம் சென்றது… அவனை அவள் சந்திக்க சென்றிருந்த போது, அவன் தனது காதலை அழகாக அவளிடம்  உரைத்த விதம்… அதை அவள் ஒரளவு  எதிர்பார்த்திருந்தாலும், அதை அவள் கண்பார்த்து நேரடியாக சொன்னபோது  அவள் உறைந்து நின்ற நிலை என அந்த காட்சிகள் அவள் கண்முன் படமாக ஓடியது… 

 

ஓவியன்… சராசரி ஆண்மகனுக்கு உரிய உயரமும், மாநிறமாக இருந்தாலும் மற்றவர்களை ஒரு முறையேனும் திரும்பி பார்க்க தூண்டும் ஆணழகன்… 

விதவிதமான வகையில் வண்ண ஓவியங்களை அசாதாரணமாக தீட்டுவதில்  தலைசிறந்த கலைஞன்…  சிறுவயதில் இருந்தே தனது திறமை இதுதான் தனக்கான பாதை இதுதான்  என அறிந்து சுயம்புவாக வளர்ந்து  தனக்கென ஒரு அடையாளத்தை  உருவாக்கிக் கொண்டவன். 

 

மேலும் தான் மட்டும் அல்லாது, தன்னைப் போல் திறமை இருந்தும், அதை வெளியிட தெரியாத, வெளியிட முடியாத குழந்தைகளின் இடத்தை தேடிச் சென்று  அவர்களையும் ஊக்கபடுத்துபவன், அப்படித்தான் அவன் "சாய் ஆடிஸ்டிக்  பள்ளியில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கு ஓவியம் பற்றிய  பயிற்சியையும் அதில் உள்ள சிறுசிறு நுணுக்கங்களையும் கற்றுக் கொடுக்க தானாக முன்வந்திருந்தான்… 

 

அப்பொழுது நந்தினி இந்த பள்ளியில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது… அந்த பள்ளியும் ஓரளவு தடுமாற்றம் இல்லாமல் சென்றுகொண்டிருக்க, ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளே மறைந்து கிடக்கும் திறமைகளை கண்டறிந்து அதற்கான தனித்தனி  பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் ஓவியத்தின் மீது  ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு கற்றுதர அங்கு வந்திருந்தான் ஓவியன்… அவன் கற்றுத்தரும் மாணவர்களில் ஆதவனும் அடக்கம். 

 

ஆதவனுக்கு மனஇறுக்கத்தை குறையாக கொடுத்த கடவுள்,  வரையும் கலையை மிக நிறைவாகவே  கொடுத்திருந்தான்… எட்டு  வயதில் அவன் தீட்டும் ஓவியம் மற்றவர்கள் கண்ணை பறிக்கும்… அப்படியிருக்க ஓவியனின் கவனத்தில் பதிந்திருக்காதா என்ன…? அவனும் ஆதவனின் திறமையில் வியந்தவன், கிட்டதட்ட அவனை தனது  சிஷ்யனாகவே ஏற்றுக் கொண்டான்… மேலும் வண்ணம் தீட்டுதலில் எத்தனை எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் பொறுமையாக அவனுக்கு புரியும்படி  சிறிது சிறிதாக கற்றுக் கொடுக்க, அதில் ஆர்வமுடைய ஆதவன் அதை கற்பூரம் போல்  உடனே பற்றிக் கொண்டான்… 

 

ஆதவனைப் பற்றி தெரிந்துக் கொள்ள அவனது அக்கா என்ற முறையில்  நந்தினியை பற்றி அறிந்தவனுக்கு, அகிலா மூலம் அவளது தன்னலமற்ற சேவையையும், அவளது பொறுமையான   மற்றும் அவளது மென்மையான குணம் தெரியவர,  அதில் பெரிதும் ஈர்க்கப்பட்டான் ஓவியன்… நாளடைவில் அந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாற, அதை அவளிடம் எப்படி தெரிவிப்பது என அவன் எண்ணிக் கொண்டிருக்கும் நேரம், காலம் அதற்கு தானாக வழிவகுத்தது…

 

வருடம் ஒருமுறை தனது ஓவியத்தையும், தனது மாணவர்களின் ஓவியத்தையும் கண்காட்சியில் வைத்து தங்களது திறமையை மற்றவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவது அவனது வழக்கம்… அதில் வரும் பணம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல… தன்னால் தன் மாணவர்களின் திறமை வெளிபடுதலிலும், அவர்களின் முகத்தில் தோன்றும் புன்னகைக்காகவே இதை வருடம்தோறும் செய்து வருகிறான்… என்ன ஒன்று இந்த தடவை அதில் வரும் பணம் முழுவதும்  பள்ளிக்கு தருவதாக கூறியிருக்கிறான் அவ்வளவே… 

 

அகிலாவின் வேண்டுகோளின்படி, ஓவிய கண்காட்சி நிகழ்ச்சி குறித்து பேச வேண்டும் என நந்தினி ஓவியனை மொபைலில் அழைத்து கேட்க,  அவனோ தனது "வர்ணஜாலங்கள்…" பயிற்சிகூடத்திற்கு அவளை வருமாறு கூறினான்… நந்தினியும்  மறுக்காமல் அவனை காண அங்கே சென்றாள்.

 

முதல் முறை அவனது பயிற்சி கூடத்திற்கு செல்கிறாள்… அந்த இடத்தை சுற்றிலும் பச்சைபசேலென மரங்களும், ஆங்காங்கே உட்காருவதற்காக போடபட்டிருந்த மரபலகைகளும், நடுவில் குடில் போன்ற அமைப்புடன் காணப்பட்ட கட்டிடம் என இயற்கையுடன் ஒன்றியமைந்த அந்த இடத்தை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது…

 

மேலும் ஆங்காங்கே சிலர், மரநிழலின் கீழ் நின்றுக் கொண்டு மர சட்டத்தில் பொருத்தபட்டிருந்த வெள்ளை பேப்பரில் தனது கற்பனை வளத்தை வர்ணஓவியங்களாக தீட்டிக் கொண்டிருக்க, அதை ரசித்துக் கொண்டே, குடில் போன்ற அமைப்புடன் இருந்த கட்டிடத்தின் உள்ளே  சென்றாள் நந்தினி… 

 

அங்கே சிறு குழந்தைகளுக்கு எண்களின் மூலம் என்னென்ன உருவங்கள் வரையலாம் என்பதை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஓவியன்… இவளது வருகையை உணர்ந்து சிறு புன்னகையை உதிர்த்தவன், தனது மாணவர்களிடம், "குட்டீஸ் நான் கத்துகொடுத்ததை பிராக்டீஸ் பண்ணிகிட்டு இருங்க… இதோ வந்திடுறேன்…" என்றவன் சிறு தலையசைப்புடன் நந்தினியை அங்கிருக்கும் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான்… 

 

அது அவனது தனிப்பட்ட பிரத்யோக அறை, 

அந்த அறையெங்கிலும் அவனது ஓவியங்கள் ஓளிவீசிக் கொண்டிருந்தன… அதைக் கண்டு மெய்மறந்த நந்தினி தான் பேச வந்த விஷயத்தை மறந்தவளாக, "நான் உங்களோட  பெயிண்டிங்ஸை  பார்க்கலாமா…?" என ஆர்வத்துடன்  மின்னலுடன் கேட்க, அவனோ கண்ணில் மின்னலுடன்  "தாராளமா…" என்றான். 

 

அவன் வரைந்த ஒவ்வொரு ஓவியத்தையும்  ரசித்து பார்த்துக் கொண்டே வந்த நந்தினி ஆர்வம் தாளாமல் "இந்த பெயிண்ட்டிங்க்ஸ் எல்லாத்தையும்  கண்காட்சியில வைப்பீங்களா ஓவியன்…?" என்று கேட்க, 

 

"ஆமா நந்தினி, நான் வரைஞ்சதிலேயே எது பெஸ்ட்ன்னு என் மனசுக்கு தோணுச்சோ  இதெயெல்லாம் தேர்ந்தெடுத்து வச்சிருக்கேன்… இதைத்தான் கண்காட்சியில் வைக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்... " என்றவன், பின்பு அவளை பார்த்துக் கொண்டே,  

 

"உங்களுக்கு பிடிச்சிருக்கா…?" என்று ஆழ்ந்த குரலில் கேட்க, அவனின் குரலின் பேதத்தை உணராதவளோ, "ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஓவியன்…" என்று கூற, அவன் முகமோ பூவாய் மலர்ந்தது… 

 

அடுத்ததாக ஒரு ஓவியம் அவள் மனதை கவர, அதன் அருகே சென்றாள் நந்தினி… அந்த ஓவியத்தில் ஒர்  இளம்தாய் தன் குழந்தையின் கன்னத்தை பாசமாக வருடியபடி தன் மார்புடன் சேர்த்தணைத்து பாலூட்டும் காட்சி தத்ரூபமாக அவன் வரைந்திருக்க, அந்த தாயின் கண்களில் தெரியும் உணர்வு அவளுக்கு வேறொரு காட்சியை நியாபகபடுத்தியதோ…!  சட்டென கண்கலங்கிவிட்டாள் நந்தினி… 

 

தாய்மைதான் எவ்வளவு அழகானது…  அதே சமயம் பல தியாகங்களையும்  உள்ளடக்கியது என்று சும்மாவா சொன்னார்கள்…  அந்த உணர்வு  தந்த தாக்கத்தில் அவளது கைகள் தானாக மேல் உயர்ந்து அந்த ஓவியத்தில்  உள்ள குழந்தையின் கன்னத்தை மென்மையாக வருட ஆரம்பித்தாள்.  தான் இழந்த சொர்க்கத்தை நினைத்து மருகியவளின் கண்ணீர் துளிகள் அவளது இமைகளை தாண்டி வெளியேவர துடிக்க, இருக்கும் சூழ்நிலை உணர்ந்து  தன்னை சுதாகரித்துக் கொண்டவள் சட்டென திரும்பி நின்று அதை சுண்டி எறிந்தாள்…

 

ஆனால் அவளது கண்ணீரை  கவனித்துவிட்ட ஓவியனோ, "என்னாச்சு நந்தினி ஏன் ஒரு மாதிரி நர்வஸா இருக்கீங்க…?" என்று பதட்டமாக கேட்க, சட்டென திரும்பி அவனை பார்த்து புன்னகை புரிந்தவள், 

 

"ஒண்ணுமில்ல ஓவியன், இந்த படத்தை பார்த்ததும் என் அம்மா ஞாபகம் வந்திருச்சு… அதான்  கொஞ்சம் இமோஷனல் ஆகிட்டேன்…" என்றவள்,  

 

"ஒரு தாயோட உணர்வுகளை எவ்ளோ  அழகா இந்த ஓவியத்துல கொண்டு வந்திருக்கீங்க ஓவியன்…உங்க கையில ஏதோ மேஜிக் இருக்கு… " என்று சொல்லவும், கனிவுடன் அவளை பார்த்தவன், அவளது பாராட்டை சிறுபுன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்… 

 

மேலும் பல ஓவியங்களை நோட்டமிட்டு கொண்டிருந்தவளின் கண்களில், முழுமையடையாத ஓவியம் ஒன்று அவளது கவனத்தை கவர அதன் அருகில் சென்றாள். 

 

வண்ணமலர்களால் ஆன ரோஜா பூங்கொத்துடன் ஓர் ஆண் ஒரு பெண்ணின் முன்னே மண்டியிட்டு தனது காதலை சொல்வது போல் அந்த ஓவியம் இருந்தாலும் காதலர்களின் முகம் மட்டும் வரையபடாமல் இருப்பதைக் கண்டவள், யோசனையுடன் அவனை பார்த்தாள். 

 

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக ஒரு பெருமூச்சுடன் "என்னால இந்த ஓவியத்துக்கு உயிரும்,  உருவமும் கொடுக்க  முடியல நந்தினி… ஒரே தடுமாற்றமா இருக்கு… நான் நினைக்கிறது நடக்குமா…? என் மனதோட  எதிர்பார்ப்பு சரிதானா…? இப்படி பல கேள்விகள் என் மனசை போட்டு அழுத்துறதுனால என்னால இதை கம்ப்ளீட் பண்ண முடியல…" என்று அவன் கூற, 

 

"ஏன் என்னாச்சு… ஏன் உங்களால வரைய முடியல…?" அவனுடன் இயல்பாக உரையாடியதால்  தன்னிச்சையாக வந்து விழுந்தன வார்த்தைகள்… 

 

அவனோ அவளது கண்களை நேராக பார்த்து, "உங்களாலதான்னு சொன்னா நீங்க நம்புவீங்களா நந்தினி…" என்று ஆழ்ந்த குரலில் கேட்க, அதைக் கேட்டு அவளது மனமோ படபடவென அடித்துக் கொண்டது… 

 

அவனது இந்த பேச்சு, அவளுக்கு எதையோ உணர்த்த, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்… 

சமீபகாலமாக அவன் பார்வை தன்மீது சற்று ஆர்வமாக படிகிறதோ…? என்று சந்தேகம் கொண்ட போதே,  ஓர் நாள் இப்படி ஏதாவது நடக்கும் என எதிர்பார்த்தாள்தான்… அதை நடக்க விடாமல் தவிர்க்கவே அன்று அகிலாவிடம் அவள் தயங்கியது… 

 

அவனோ அவளது படபடப்பை ரசித்தவன் புன்னகையுடனே, "ரிலாக்ஸ் நந்தினி… எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க… ஐ திங்க்  நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்…" என்றதும் அவள் ஏதோ மறுத்து பேச வர, 

 

"ஒரு நிமிஷம் நந்தினி, நான் பேச ஒரு சான்ஸ் கொடுங்களேன் பிலீஸ்…  நான் என்ன சொல்ல வர்றேன்னு  கொஞ்சம் கேளுங்க… அப்புறம் உங்க முடிவு  என்னவா இருந்தாலும் அதை மனசார ஏத்துக்கிறேன்…" என்றவன் தன் இரு விரலால் தொண்டைகுழியை பிடித்துக் கொண்டு 

 

"ஐ பிராமிஸ் உங்க மனசுக்கு கஷ்டம் தர்ற மாதிரி நான் பேசுவும் மாட்டேன் நடந்துக்கவும் மாட்டேன்…" என்றதும் அவனது செயலில் சிறு புன்னகை எட்டி பார்த்தாலும் அதை  மறைத்துக் கொண்டு அமைதியாக அவனை ஏறிட்டாள் நந்தினி.

 

அதில் தைரியம் வர பெற்றவனாக, "எனக்கு விபரம் தெரியுற வயசு வரைக்கும் அப்பா அம்மா பாசம்ன்னா  எனக்கு என்னன்னு தெரியாது நந்தினி… தெரிஞ்சிக்க  விரும்பிய போதோ அவங்க  ரெண்டு பேரும் என்னை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டாங்க… ஆமா மன பொருத்தம் இல்லாத கல்யாணம் ஒரு ஸ்டேஜ்ல நிலைக்காமலே  போயிடுச்சு… அம்மாவும் அப்பாவும் அவங்க அவங்க வழியை பார்த்துட்டு போயிட்டாங்க… அன்பை மொத்தமா கொடுக்க விரும்பாம, தனி தனியா காட்ட நினைச்சாங்க… பட் எனக்கு அது பிடிக்கல… சோ நான் என் அப்பா வழி தாத்தா பாட்டிகிட்டதான் வளர்ந்தேன்…  அவங்களும்  முதுமை  காரணமா ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் போய் சேர்ந்துட்டாங்க… காசுக்கு பஞ்சமில்ல… இருந்தும் அதை அளவுக்கு மீறி நான் தொட விரும்பல… எனக்கான பாதை எதுன்னு உணர்ந்து முட்டி மோதி தானா எழுந்து நின்னேன்… இப்ப மத்தவங்களும் எழுந்து நிக்க என்னால் ஆன உதவியும் பண்றேன்… 

 

இப்படியே என் வாழ்க்கையை போனாலும் எனக்கு சந்தோஷம்தான்… ஆனா ஒரு கட்டத்துல நான் தளர்ந்து போய் இருக்கும் போது தோள் சாய்ஞ்சிக்க ஒரு துணை தேவைன்னா அது என் மனைவியா மட்டும்தான் இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்… 

 

அந்த  சமயம் அவ எனக்கு மனைவியா மட்டும்  இல்லாம, எனக்கு அம்மாவா இருக்கணும்ன்னு ஆசைபடுறேன்… அந்த இடத்தை உங்களால பூர்த்தி செய்யமுடியுமா நந்தினி... ? ஆதவனுக்கு கிடைக்கிற பாசத்துல ஒரு சதவீதமாவது எனக்கும்  கிடைக்குமா நந்தினி…?" என்று ஏக்கத்துடன் அவன் கேட்க அவளோ திகைத்துப் போய் அவனை பார்த்திருந்தாள்… 

 

ஆறடி ஆண்மகன் சிறு குழந்தையாய் மாறி தன்னிடம் காதல் யாசகம் கேட்பது   உள்ளுக்குள் என்னவோ செய்தது… அந்த உணர்வுக்கு பெயர் சத்தியமாக காதல் இல்லை… அதையும் தாண்டி தாய்மையுணர்வுதான் பொங்கியது… ஆனால் ஓவியன் கேட்பது தாய்மையுடன் கூடிய காதலை அல்லவா… அதை எந்நாளும் அவளால் தர முடியாதே… 

 

தாயாய் தாரமாய் நீ என் வாழ்வில் வர வேண்டும் என அவன் யாசிக்க, அவளோ  

தந்தைபாசத்தை கண்டிப்புடனும் உரிமையுடனும் காட்டிய அவளின் ஆண்மகனிடம் எப்பொழுதோ சரணாகதி அடைந்துவிட்டாளே … அதனால் இவனுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தடுமாறி நின்றாள்… 

 

இதே இடத்தில்  வேறொரு பெண் இருந்திருந்தால் ஓவியனின் காதலில் திளைத்து உருகி அப்போதே சம்மதம் சொல்லியிருப்பாள்… ஆனால் அவன் தன் காதலை கூறியது நந்தினியிடம் ஆயிற்றே…

 

ஓவியனின்  காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல், அதை நிராகரிக்கும் வழி தெரியாமல் அவள் தவிக்கும்  தவிப்பு அவளுக்கு மட்டுமே தெரியும்… 

 

நந்தினியின்  கண்களில் அலைபுறுதலைக் கண்ட ஓவியனுக்கு அதற்கு மேலும் அவளை தவிக்கவிட மனம் வரவில்லை… 

"என் மனசோட ஆசையைதான் இப்படி ஓவியமா வரைஞ்சிருக்கேன் நந்தினி… இந்த ஓவியம் முழுமை பெறுவதும் பெறாததும் உங்க கையில்தான் இருக்கு… இதுக்கு மேல  இந்த விஷயத்துக்காக உங்களை என்னைக்குமே டிஸ்டர்ப்  பண்ண மாட்டேன்… டிரஸ்ட் மீ…" என்றவன், அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றவன், ஓர் மரத்தடியின் நிழலில் அமைக்கபட்டிருந்த பென்ஞ்சில்  அமர்ந்து கண்காட்சி நிகழ்ச்சி குறித்து பேச ஆரம்பித்தான்… 

 

அதன்பிறகு அவன் என்னமோ சாதாரணமாகதான் பேச ஆரம்பித்தான் ஆனால் நந்தினிக்குதான் தர்மசங்கடமாகி போனதில் சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிட்டாள்… அதை இன்று நினைத்து பார்த்தவளுக்கு மனதில் மேலும் பாரமாகி போனது… எதிர்காலமே இல்லாத காதலுக்கு முக்கியதுவம் கொடுத்து நிகழ்காலத்தை கெடுத்துக் கொள்கிறோமோ என நினைத்தவளுக்கு மனதின் அலைபுறுதல் மட்டும் குறையவே இல்லை… அதை தாங்கமுடியாமல் இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்து  கண்களை இறுக்கமாக மூடிக்  கொள்ள, அவளின் மூடிய விழிகளுக்குள் வந்து மாயக்கண்ணனாய் சிரித்தான் அவன்… 

 

கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன்,

மீண்டும் ஏன் இந்த ஏக்கம்…!

வெள்ளை மேக துண்டுக்குள் எழும் மின்னல் போல்,  

எந்தன் வாழ்வெங்கும் மின்னல்…!

என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்,

என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்…!

சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே,

தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே…! 

 

இவளது ஏக்கம் கலந்த தவிப்பு அவளவனை சென்றடைந்ததோ என்னவோ, அமெரிக்காவில் இருந்து மும்பை வந்துக் கொண்டிருக்கும்   விமானத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவன், ஏதோ உந்துதலில் சட்டென கண்விழித்தான்… இந்தியா செல்ல வேண்டும் என ஒரு மாத காலமாக  இரவு பகல் பாராமல் அயராமல் உழைத்த உழைப்பு… மற்ற நேரத்தில் ஷாப்பிங் என ஓடிக் கொண்டிருந்தவனுக்கு நிம்மதியான தூக்கம் என்பதே இல்லாமல் போயிற்று… அவனது நிம்மதியைத்தான் துடிக்க துடிக்க அவள் என்றோ பறித்துச் சென்றுவிட்டாளே…! 

 

கண்கள் தீயாய் எரிந்தாலும் கஷ்டபட்டு கண்விழத்தவனுக்கு  தன் மார்பின்  மேல் பூப்பந்தாய் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டு சிறு புன்னைகை வந்தது… அவளும் அப்படித்தானே தன்னை கட்டிக் கொண்டு தூங்குவாள்… 

 

பகல் முழுவதும் தாயாய் இருப்பவள், இரவில்  சேயாய் தன்னிடம் அடைக்கலம் ஆகி  போன விந்தை  கடைசி வரை அவள் அறியாமல் போனதுதான் இங்கு விதியின் விளையாட்டு என விரக்தியாக நினைத்துக் கொண்டான்…  

 

அந்நேரம் குழந்தை தூக்கம் கலைந்து  லேசாக சிணுங்க ஆரம்பிக்க, தன்னோடு மேலும் சேர்த்தணைத்துக் கொண்டவன், மெதுவாக குழந்தையை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். 

 

நண்பனின் முகத்தில் வந்து போன பாவனைகளை  அவன் அருகில் அமர்ந்துக் கொண்டு பாராமல் பார்த்துக் கொண்டிருந்த மேத்யூக்கு மனம் பாரமாகி போனது… தன்னால்தானே இவனுக்கு இந்த துன்பம்… தான் மட்டும்  உயிரோடு திரும்பி வராமல் இருந்திருந்தால் நண்பனின் வாழ்வு இப்படி பாழாகி  இருக்காதே… என நினைத்தவன் முதல் முறையாக இறப்பில் இருந்து மீண்டு திரும்பி  வந்ததற்கு மனம் வருந்தினான்… 

 

நண்பனின் கையில் பாந்தமாக துயில்கொள்ளும் பூக்குவியலை காணக் காண அவனது மனது ரணமாய் வலித்தது… இந்த குழந்தைக்காகவாவது நண்பன் தான் இழந்த வாழ்க்கையை  மீட்டெடுக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டான்… 

 

விமானம் சரியான நேரத்தில் தரையிறங்க, தங்களது பெட்டிகளை சேகரித்துக் கொண்டவர்கள்,  சோதனைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தனர்…  அங்கே இவர்களின் பெயர் எழுதிய  நேம்போர்டை தாங்கிக் நின்றவனைக் கண்ட மேத்யூ… "ஹீ இஸ் ஃதேர்…" என்று நண்பனிடம் பிரபுவை சுட்டிகாட்ட புன்னகையுடன்  அவன் அருகே சென்றனர்… 

 

பிரபுவோ தன் அருகில் வந்து நின்றவர்களை கவனிக்காமல் அவர்களை தாண்டி கண்களை சுழலவிட, நண்பனின் குறும்புதனத்தை உணர்ந்துக் கொண்டவனோ, "நீங்க தேடும் அர்ஜூன் அன் மேத்யூ  நாங்கதான்…" என தங்களை  அறிமுகபடுத்திக் கொண்டான்… 

 

பிரபுவோ தன்னிடம் பேசியவனை விசித்திரமாக பார்த்தவன், "சாரி சார் நான் தேடும் நபர்  நீங்க இல்ல… அவனுக்கு இன்னும் கல்யாணமும் ஆகல… அவன் அமெரிக்கா போன போது ஒத்தையாதான் போனான்… ஆனா நீங்க ரெண்டு பேரா…" என இழுத்து கூறியவன், மேத்யூவை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு  "அதுக்கு சான்ஸ் இல்லன்னாலும் கையில ஒரு குழந்தையோட  வந்துருக்கீங்க… சோ  நீங்க அவன் இல்ல…"  என்று கூற, அவன் என்ன கூறுகிறான் என புரியாமல் மேத்யூ திறுதிறுவென விழித்தான் என்றால், அர்த்தம் புரிந்த அர்ஜூனோ , "டேய் உன்னை…" என பல்லை கடித்தவன்,  மேத்யூவின் பாவனையில் பக்கென சிரித்துவிட்டான்… 

 

பிரபுவோ அர்ஜூனின் முகத்தை உற்று பார்த்து, "நீங்க சிரிக்கும் போது என் நண்பன் சாயல் லைட்டா தெரியுதுதான்  ஆனாலும்…" என்றவன் மீண்டும் மேத்யூவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "அவன் டேஸ்ட் இப்படி மட்டமா இருக்காது…" என்றவன் அடக்கபட்ட சிரிப்புடன்… 

 

இம்முறை அவன் சொல்லவருவது என்னவென்று மேத்யூக்கு சரியாக புரிய, பிரபுவை முறைத்தவன், " ஹலோ மை பிரெண்ட்  இதெல்லாம் டூ மச்… என்னை பார்த்தா "அவனா நீ " மாதிரியா தெரியுது…"  என்று  பாவமாக கேட்க, 

 

அர்ஜூனா  "டேய் பிரபு அடங்குடா… எதுக்குடா வந்ததும் வராதுமா அவனை  வம்புக்கு இழுக்குற…?" என சிரித்துக் கொண்டே பிரபுவின் தோளில் ஒரு அடி அடித்தான்.  

 

"பின்ன என்னடா ஒரு பொண்ணை கூட்டிகிட்டு  நீ கைகுழந்தையோட வந்திருந்தா… எனக்கும்  புதுசா தங்கச்சி கிடைச்சிட்டாங்கற சந்தோஷத்துல உன்னை ஆர்பாட்டமா வரவேற்று இருப்பேன்… ஆனா நீ இவரோட  வந்து அதிர்ச்சி கொடுத்ததும் ஒரு நிமிஷம் எனக்கே சந்தேகம் வந்திடுச்சு என் நண்பன் அர்ஜூன் நீதானான்னு…" என்றவன், விளையாட்டுதனத்தை கைவிட்டவனாக, அர்ஜூனை கட்டியணைத்து, 

 

"வெல்கம் டூ மும்பை நண்பா…" என்றவன், பின்பு  தன்னை முறைத்துக் கொண்டிருந்த மேத்யூவையும் கட்டியணைத்து, "கோவிச்சிகாதீங்க பாஸ்… சும்மா உங்ககிட்ட விளையாடினேன்… நீங்க வேற செம மேன்லியா இருக்கீங்களா… இப்படி பேசினா உங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சிக்கதான் அப்படி பேசினேன் …" என்றதும் மேத்யூவும் புன்னகையுடன் அவனை கட்டியணைத்தான்…

 

குழந்தையைப் பற்றி எந்த விபரமும்  கேட்கவில்லை பிரபு… தன்னிடம் சொல்லக்கூடியதாக இருந்தால் அர்ஜூனே கண்டிப்பாக கூறுவான் என்ற நம்பிக்கையில்   அவர்களிடமிருந்து டிராலியை வாங்கி தள்ளிக் கொண்டு,  இருவரிடமும் பயணத்தை பத்தி விசாரித்துக் கொண்டே,  தனது கார் அருகில் வந்தவன் சூட்கேஸை காரின் பின்னால் வைத்துவிட்டு, அவர்களை அழைத்துக் கொண்டு தனது வீடு நோக்கி சென்றான். 

 

**** 

 

மாலை ஆறு மணியளவில் நந்தினியும் ரஞ்சனியும் ஆதவனுடன் சென்னை வந்திறங்கினர்.  அவர்களின் வரவுக்காக  காத்திருந்த ராஜேஷ், மூவரையும் அழைத்துக் கொண்டு, அவர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த உயர்தர ஹோட்டலுக்கு சென்றான்… 

 

மூவருக்கும் தேவையான வசதிகளை கேட்டு செய்துவிட்டு, அவன் கிளம்பும் நேரம், அவன் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது… மொபைலை ஆன் செய்து காதில் வைக்கவும், எதிர்முனையில் என்ன கேள்வி கேட்கபட்டதோ…?

 

"ம்ம்ம் வந்துட்டாங்கம்மா… இங்கதான் நம்ம வீடு பக்கத்துல இருக்கிற ஹோட்டலில் தங்க வச்சிருக்கேன்…" என்றதும் எதிர்முனையில் பலத்த அமைதி நிலவியது… 

 

மனைவியின் அமைதி எதற்கென்று புரிந்ததும், "எல்லாம் சரியாகிடும் கண்ணம்மா … எதுக்கும் கவலைபடாதே…" என்று கூறியதும் மறுமுனையில் சிறு விசும்பல் ஒலி கேட்க அத்துடன் போனும் கட்டாகியது.

 

மனைவியின் மனதை புரிந்துக் கொண்டவனோ, இருவரிடமும் சொல்லிக் கொண்டு உடனே வீட்டை நோக்கி சென்றான்…  தங்கையின் மனநிலை நந்தினிக்கும் ரஞ்சனிக்கும் புரிந்ததுதான்… ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் அவர்களை கட்டிபோட்டது… 

 

ஓர் அரைமணி நேரம் சென்றிருக்கும்… பயண களைப்பில் ஆதவன் உறக்கத்தில் இருக்க,  நந்தினியோ நாளை வளைகாப்புக்கு தேவையானதை   தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.  ரஞ்சனியோ நாளைய போட்டோஷூட் எப்படி எல்லாம் எடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கியிருக்க… அப்பொழுது அவர்கள் அறையின் அழைப்புமணி ஒலித்தது… 

 

அதில் சிந்தனை கலைந்த ரஞ்சனி, எழுந்து போய் கதவை திறக்க, அங்கே அறையின் வாசலில் கண்ணீருடன் நின்றிருந்த சாந்தினியைக் கண்டு திகைத்தாள்… தன்னுடைய உடன்பிறப்பு, அதுவும் தாயின் கருவறையில் தன்னுடன் ஒட்டி பிறந்த இரட்டை பிறப்பு கண்ணீருடன் நின்றிருப்பதை  தாங்கமுடியாமல்

அவளது கண்களும் கலங்க ஆரம்பித்தது.   

உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வந்தேனே…!

உண்டாகிறாய் துண்டாகிறாய்

உன்னால் காயம் கொண்டேனே…!

காயத்தை நேசித்தேனே 

என்ன சொல்ல நானும் இனி…!

நான் கனவிலும் வசித்தேனே

என்னுடைய உலகம் தனி தனி…!

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்…!

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்

கண்ணை துண்டாக்கி துள்ளும்…!


sangeetha2013, Unknown, Dharunkanika and 2 people liked
Quote
(@punitha)
Trusted Member
Joined: 2 years ago
Posts: 83
 

ஓவியன் மனசுல உள்ளதை நந்தினிகிட்ட சொல்லியாச்சு. ஆனா அவள் மனசுல என்னதான் இருக்கு🤔

பிரபுக்கு அர்ஜுனை பாத்தா அவன்' மாறியா இருக்கு..

லொள்ளை பாரேன் 🙄🙄

அர்ஜுனோட வாழ்க்கையிலும் அப்படி  என்னதான் நடந்திருக்கும்🤔

அந்த குழந்தை யாரோடது🤔

ரஞ்சனி & சாந்தினி ட்வின்ஸ்ஸா😁

சூப்பர் 🥳🥳


(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

@punitha

தேங்க்யூ புனிதா😍😍😍

ஆமா ரஞ்சனியும் சாந்தினியும் டுவின்ஸ்தான்... நந்தினி ஓவியத்தை பார்த்து கண்கலங்கினதுக்கும்...

அர்ஜூன்  குழந்தையா...? நந்தினி மனசுல என்ன இருக்கு... ? நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம்... நிறைய க்ளூ தந்திருக்கேன் நான் இந்த எபில


Unknown and punitha liked
ReplyQuote
(@punitha)
Trusted Member
Joined: 2 years ago
Posts: 83
 

@mohana-karthik

நாங்க எப்பவும் மூளைக்கு வேலை கொடுக்கவே மாட்டோம்🙄

அதெல்லாம் தப்பு🚶🏼‍♀️🚶🏼‍♀️

நீங்களே சொல்லிருங்க😁😁

அவ மனசுல அர்ஜுன் தான்..

ஆனா மேத்யூவால அவன் லைஃப்ல என்ன நடந்திருக்கும் ன்னுதான் தெரியல🤔🤔


(@unknown)
Eminent Member
Joined: 2 years ago
Posts: 39
 

 

Wowwww..   Ooviyan ooda proposal evvllloooooo azhagha erukuuu😍😍😍😍😍rasighan yaaa avann😍😍😍😍accchachooo.... Appo ooviyan vera prabhu ooda friend verayaa 🙆🙆🙆🙆 appo avangha rendu perula garnu nandini kku jodi. .. Athum arjun kku kulanthaiyaaa😳😳😳atha patthu avan friend yen feel pannrannn... .happaappaaaa.... Ettana twist 😰😰😰😰😰😰😰 ranjani & santhani umm twin's ahhh 😍😍😍😍😍


(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

@saranya-srinivas

தேங்க்யூ சரண்யா😍😍😍 எஸ் ரஞ்சனியும் சாந்தினியும் டுவின்ஸ்தான்... உங்க கேள்விகளுகான பதில் அடுத்த அடுத்த எபில தரேன்😁😁😁


Unknown liked
ReplyQuote
(@sss123)
Active Member
Joined: 2 years ago
Posts: 18
 

Next UD please


ReplyQuote
(@punnagai-pookal)
New Member
Joined: 2 years ago
Posts: 1
 

Hai  mohi akka adutha episode epo poduvinga akka waiting for your next update

 


ReplyQuote
Share:
6
6