Views 1,502,734 

Notifications
Clear all

கனவு 3


(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

ஹாய் ஹாய் நட்பூஸ்

"கொஞ்சம் கனவுகள் கொஞ்சும் நினைவுகள்...!!!" கதையின் மூன்றாவது அத்தியாயம் பதித்துவிட்டேன்...

படித்துவிட்டு எப்படி இருந்ததுன்னு என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்...

என்றும் அன்புடன்
உங்கள்
மோகனா கார்த்திக்😍😍😍

 

கனவு 3

 

ஓம் சாய் ராம்

 

பிரபுவின் எதிரே அமர்ந்திருந்த ராஜேஷை கண்டு திகைத்துதான் போனாள்  ரஞ்சனி… தங்கையின் வளைகாப்பு நேரம் நெருங்கி கொண்டிருக்க, அவள் பக்கத்தில் இல்லாமல் இவன் மும்பை வரை எதற்கு வந்திருக்கிறான்…? சரி அப்படியே மும்பை வந்தாலும் வீட்டிற்கு கூட வராமல் இங்கு என்ன செய்கிறான்…?  என்ற யோசனையுடன் உள்ளே வந்தவள் ராஜேஷை பார்த்து சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, பிரபுவை ஏகத்துக்கும் முறைத்து பார்த்தாள்… 

 

குறும்சிரிப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்த பிரபுவோ ராஜேஷ் அறியாமல் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு  பின்பு ஏதும் அறியாதவன் போல் முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டவன், "மிஸ்டர் ராஜேஷ்… இவங்கதான் நான் சொன்ன மிஸ் ரஞ்சனி… இவங்க நீங்க எதிர்பார்த்த மாதிரியே போட்டோ ஷூட்டும் மத்த அரேன்ஜ்மென்ட்ஸூம் பண்ணி கொடுப்பாங்க…" என்று ராஜேஷ்க்கு கூறியவன், 

 

பின்பு அவளை பார்த்து, "மிஸ் ரஞ்சனி இவர் சென்னையில இருந்து வந்திருக்கார்… அவரோட மனைவிக்கு வர்ற திங்கள்கிழமை பேபி ஷவர் செர்மனி நடத்த  இருக்காங்களாம்… அதுக்கான போட்டோ ஷூட்டும், பங்ஷனுக்கு தேவையான அரேன்ஜ்மென்ட்ஸூம் நம்ம மேனேஜ்மென்ட் செய்து தரணும்ன்னு நம்மளை தேடி வந்திருக்காரு… அவர் என்ன மாதிரி எதிர்பார்க்கிறாருன்னு கேட்டு அதுக்கு ஏத்தமாதிரி செஞ்சி கொடுத்திடுங்க…" என்று அவன் கூறி முடித்ததும், இப்பொழுது பிரபுவை விடுத்து ராஜேஷை முறைக்க ஆரம்பித்தாள் ரஞ்சனி…

 

பின்னே பர்சனலாக அவன் அழைத்தும் தான்  வரவில்லை என்று சொன்னதற்காக, தொழில் ரீதியாக தன்னை அணுகி தங்கையின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரவழைக்க ஏற்பாடு செய்துவிட்டான் அல்லவா… அவனது திறமையைக் கண்டு "ஸ்மார்ட் மூவ்…" என உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாள் ரஞ்சனி.

 

அவளது  முறைப்பைக் கண்ட  ராஜேஷ், "ஐ திங்க் மிஸ் ரஞ்சனிக்கு  இதில இஷ்டம் இல்லன்னு நினைக்கிறேன்… விரும்பம் இல்லாம இந்த பங்ஷனுக்கு வந்து போட்டோ ஷூட் சரியா பண்ணலன்னா என் வொய்ப்கிட்ட என்னால பேச்சு வாங்க முடியாது… புள்ளதாச்சியா வேற இருக்கா… இந்த நேரத்துல அவ ஆசைபட்டது  நடக்கலன்னா ரொம்ப ஏங்கி போயிடுவா... " என்று பிரபுவிடம் பேசினாலும் அதில் பொதிந்துள்ள செய்தி தனக்கானது என்று புரியாதவளா அவள்… பதிலுக்கு அவள் பேச வாய்திறக்கும் முன், 

 

"நோ நோ மிஸ் ரஞ்சனி  பார்க்கதான் டெரர்ரா இருப்பாங்க… பட் வேலையில படுசுட்டி… அன் மோர் ஓவர் ஷீ  இஸ் வெரிகுட் கிரியேட்டிவ் போட்டோகிராபர்… அதனாலதான் அவங்களை சஜ்ஜஸ்ட் பண்ணேன்… மத்தபடி திறமை இல்லாதவங்களை நான் என்னைக்குமே என்கூட வச்சிக்கிறதில்ல…" என்று அவளை  வஞ்சபுகழ்ச்சி செய்ய இரு ஆண்களின் பேச்சைக் கேட்டு அவளது பொறுமை காற்றில் பறந்து போனது… 

 

"எனக்கு இஷ்டமில்லன்னு தெரியுதுதானே…  அப்புறம் எதுக்கு சார் வேலை மெனகெட்டு மும்பை வரை வந்தீங்க… சென்னையிலேயே  வேற ஏதாவது மேனேஜ்மென்ட் பார்த்திருக்க வேண்டியதுதானே…?" என்று ராஜேஷிடம் அவள் எகிற ஆரம்பக்க,  அதற்கான பதில் பிரபுவிடம் இருந்து வந்தது… 

 

"வாட் இஸ் திஸ்  ரஞ்சனி…? எதுக்கு இப்படி பிஹேவ் பண்ணுறீங்க… இவர் நம்மகிட்ட ஈவன்ட் பத்தி பேச வந்ததுனால  உங்களுக்கு என்ன பிரச்சினை…? அப்படியே பிரச்சினையா இருந்தாலும் உங்க பர்சனல் பிராபளத்தை என் பிஸ்னஸ்குள்ள கொண்டு வராதீங்க… உங்க கோபத்தை  எல்லாம் இப்படி நம்மகிட்ட வர்ற கஸ்டமர்கிட்ட காட்டிகிட்டு இருந்தா விளங்கிடும் என் பிஸ்னஸ்…? " என ரஞ்சனியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பிரபு, 

 

"ஏன் சென்னையில நடக்கிற பங்ஷனுக்கு மும்பையில இருக்கிறவங்க ஈவென்ட் பண்ணகூடாதுன்னு இருக்கா என்ன…? ஃபார் யுவர் கைன்ட் இன்பர்மேஷன், தமிழ்நாட்ல இருக்கிற கண்டாங்கிபட்டிங்கிற கிராமம் வரைக்கும் நம்ம ஈவென்ட் பண்ணியிருக்கோம்ங்கிறதை நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்…?" என்று படுநக்கலுடன், அதே சமயம் அழுத்தத்துடன் அவளை பார்த்து கூற, அவனின் வார்த்தையில்  ரஞ்சனியின் வாய் தானாக மூடிக் கொண்டது… 

 

தான் பேசியது அதிகப்படி என்று அவள் மனதுக்குள் நினைத்தாலும்,  அதை மற்றவனின் முன்பு சுட்டிகாட்டிய பிரபுவின் மீது அவளுக்கு கோபம் எழுந்த அதே சமயம்,  தங்கை கணவன் முன் தேவையில்லாத விவாதங்கள் வேண்டாம் என நினைத்தவள், "சாரி மிஸ்டர் ராஜேஷ்… உங்க மனைவியோட பேபி ஷவர் செர்மனியை நானே சென்னைக்கு வந்து பக்காவா செஞ்சி தரேன்…" என்றவள், 

 

"பங்ஷனுக்கு என்ன மாதிரி டெகரேஷன் பண்ணணும்… போட்டோ ஷூட் எங்கே எப்படி வேணும்னுங்கிற டீட்டைல்ஸ் சொல்லிட்டீங்கன்னா நாங்க அரேன்ஜ் பண்றதுக்கு வசதியா இருக்கும்… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்னோட லேப்டாப்ல தீம் பத்தின டீட்டைல் இருக்கு எடுத்துட்டு வரேன் " என்றவள், அந்த அறையை விட்டு வெறியேற, அதை பார்த்துக் கொண்டிருந்த இரு ஆண்களின் முகத்திலும் புன்னகை வந்தது…  

 

"தேங்க்யூ மிஸ்டர் பிரபு… என் வேலை இவ்ளோ சுலபமா முடியும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல… " என்று ராஜேஷ் கூறியதும், 

 

"ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க  ராஜேஷ்… சோ ரஞ்சனிகிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசினாதான் அவளை வழிக்கு கொண்டு வரமுடியும்…" என்றதும்,  "அதுவும் சரிதான்…" என்று ஒத்துக் கொண்டான் மற்றவன்…

 

அவன் எதிர்பார்த்ததும் அதுதானே… ரஞ்சனியின் பிடிவாதத்தை பற்றி நந்தினி ராஜேஷிடம் கூற, அதைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்தவனுக்கு கிடைத்த ஐடியாதான் அவள் வேலை செய்யும் மேனேஜ்மென்ட்டை நாடி வந்தது… எப்படியும் தன் மனைவியின் வளைகாப்பு  விழாவிற்கான ஏற்பாடுகளை அவன் வேறு ஒருவர் மூலம் செய்யத்தான் போகிறான்… அந்த வேறு ஒருவருக்கு பதில் ரஞ்சனி வேலை பார்க்கும் ஈவென்ட் என்றால், விழாவிற்கான ஏற்பாடுகளும் அதை மேற்பார்வை பார்க்கவென அவளும் வரத்தானே வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய மறுநொடியே மும்பை கிளம்பி வந்துவிட்டான்… 

 

அலுவலகத்தில் நுழைந்தவன், நேராக பிரபுவை சந்தித்து,  தன் மனைவியின் வளைகாப்பு ஈவென்ட் குறித்து பேச, பிரபுவோ அவன் குறிப்பிட்ட தேதியில்  ஏற்கனவே முன்பதிவு செய்யபட்ட சில முக்கியமான நிகழ்ச்சிகள் இருப்பதாக கூறி அவனிடம் மறுக்க,

 

"உங்களோட போட்டோ ஷூட் பெஸ்ட்டா இருக்கும்ன்னு கேள்விபட்டு ரொம்ப எதிர்பார்ப்போட வந்தேன்… பட் நீங்க பிஸின்னு சொல்லிட்டீங்க… சோ உங்க ஆபிஸ்ல வேலை பார்க்கிற  வேற யாரையாவது அனுப்ப முடியுமா…" என்று ராஜேஷ் கேட்க, பிரபுவோ யோசனையுடன் அவனை பார்த்தான்…

 

அவன் பொடி வைத்து பேசுவது போல் தோன்றவும்,  "என்ன கேட்கணுமோ அதை நேரடியாவே கேளுங்க மிஸ்டர் ராஜேஷ்…" என்றவனின் கேள்வியில் சற்று திகைத்தாலும், தனது வேலை சுமூகமாக முடிய வேண்டும் என்ற எண்ணத்தில், தான் யார் என்று அறிமுகபடுத்திக் கொண்டவன் ரஞ்சனியின் பிடிவாதத்தை பற்றியும் கூறினான்.

 

சிறிது நேரம் யோசித்த பிரபு, பின்பு மற்றவனின்  நிலைமை புரிந்தவனாக, அவனது கோரிக்கைக்கு சம்மதம் சொன்னவன், உடனே ரஞ்சனியை போனில் அழைத்து அவள் வாயாலேயே இந்த நிகழ்ச்சிக்கு செல்ல சம்மதிக்கவும் வைத்ததை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாலும்  

ஆரம்பத்தில் இருந்தே  ஒரு விஷயத்தை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான் ராஜேஷ்… 

 

புயலாய் அறைக்குள் வந்த ரஞ்சனி,  பிரபுவின் ஒற்றை வார்த்தையில் அடங்கி போனதையும், அவளின்  மீதான பிரபுவின் ரகசிய பார்வை மற்றும் சீண்டல்களை அவர்கள் அறியாமல் அவதனித்துக் கொண்டிருந்தவனுக்கு,  ஏதோ புரிவது போல் இருக்க, "நீங்க ரஞ்சனியை லவ் பண்றீங்களா…?" என்று நேரடியாகவே கேட்டு விட்டான்…

 

அவனது கேள்வியில் சற்று திகைத்த பிரபு,  "அவ்ளோ அப்பட்டமாவா தெரியுது…" என மெலிதான புன்னகையுடன்  கேட்க, 

 

"ரொம்பவே…" என கண்சிமிட்டிய ராஜேஷ்,  

"நீங்க அவளை காதல் பார்வை பார்க்க, அவ உங்களை பதிலுக்கு முறைக்கன்னு  உங்க ரெண்டு பேரையும் பாராமல் பார்த்த எனக்கு கண்கொள்ளா காட்சியா இருந்துச்சு…  

 

"அதுமட்டுமா, படபட பட்டாசா வெடிச்சிட்டு இருந்த ரஞ்சனி, கண்டாங்கிபட்டிங்கிற ஊர் பேரை கேட்டதும் ஊசிபோன பட்டாசா புஸ்ஸூன்னு அமைதியா ஆனதையும்  கவனிச்சிட்டுதான் இருந்தேன்… " என்று கூறி சிரித்தவன், 

 

பின்பு  இருக்கையை முன்னால் நகர்த்தி, பிரபுவிடம் ரகசிய குரலில், " எங்க வீட்டு பொண்ணு  வாயை கட்டிபோட்ட அந்த ஊர்ல என்னமோ நடந்திருக்கு… அது என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா…" என்று ராஜேஷ் கேட்க, அவனது ஆர்வத்தில் வாய்விட்டு சிரித்த பிரபு, 

 

"கதையோட அடிமடியிலேயே கைவைக்கிறீங்களே சார்… அதை இப்ப சொன்னா சுவாரஸியம் போயிடுமே" என்று கூறி சிரித்தானே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை… அதற்குள் ரஞ்சனி தனது லேப்டாப் உடன் அந்த அறைக்குள் நுழைய, மூவரின் பேச்சும் வேலை சம்மந்தமாக திரும்பியது… 

 

தனது லேப்டாப்பில் இருந்து ரஞ்சனி சில தீம்களை ராஜேஷூக்கு போட்டு காட்ட, அதில் தனக்கு பிடித்த ஒன்றை  செலக்ட் செய்து, அதில் சில பல மாற்றங்களை கூறி அதை முடிவு செய்தவன், பணம் பற்றிய விபரங்களை பிரபுவிடம் பேசினான், எல்லாம் சுமூகமாக முடிய, சிறிது நேரத்தில் தனக்கு வேலையிருப்பதாக கூறி ராஜேஷ்  சென்றுவிட, ரஞ்சனியும் அதன் தொடர்பான வேலை விஷயங்களை பிரபுவிடம் பேசிவிட்டு தன் லேப்டாப்புடன் வெளியேறும் நேரம், 

 

"மிஸ் ரஞ்சனி... போறதும்தான் போறீங்க லிப்லாக் பண்ணிட்டு போங்க…"  என்று தன்முன் இருந்த கணினியை பார்த்துக் கொண்டே அவன் கூற, ரஞ்சினியோ அதை கேட்டு காளி அவதாரம் எடுத்தபடி "இவனை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்…" என நினைத்தபடி அவனை நெருங்கும் வேளையில், அவளின் முகபாவனையை  ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த பிரபு, நொடியில் சுதாரித்து கணினியின் மீதிருந்த பார்வையை விளக்காமலேயே, 

 

"சாரி தங் ஸ்லிப் ஆகிருச்சி, போகும் போது டோர் லாக் பண்ணிட்டு போங்க..." என்றதும், 

ரஞ்சனியோ அவன் பேச்சால் எழுந்த கோபத்தை புஸூபுஸூவென பெருமூச்சை வெளியிட்டு, அவன் மீது இருந்த கொலைவெறியை  கதவின் மீது காட்டிவிட்டு வெளியே வந்தவளுக்கோ மனதில் ஆயிரம் யோசனைகள் எழுந்தது.

 

'ஒருவேளை கண்டுபிடிச்சிருப்பானோ…? அதுனாலதான் காலையில் இருந்து முத்தம் கேட்டு நம்மளை டெஸ்ட் பண்றானோ…' என அவள் யோசனையில் மூழ்க,  

 

இங்கே, படார் என்ற சத்தத்தில் நிமிர்ந்த பிரபுவோ  மனதுக்குள் "யப்பா ஜஸ்ட் மிஸ்டா பிரபு… இல்ல அந்த சத்தம் உன் கன்னத்துல இருந்து வந்திருக்கும்…"  என நினைத்துக் கொண்டாலும்… அவளை சீண்டிவிட்டு கோபப்படுத்துவதில் அலாதி இன்பம் கண்டான் பிரபு… 

 

அதே சமயம் சில நாட்களாக அவன் மனம் தேடும் சில கேள்விக்கு அவள்மூலம் விடையறிய காத்திருக்கிறான்… ஆனால் அவளோ அவனை விட்டு விலகுவதிலேயே குறியாக இருக்கிறாள்… அதற்கு சில சம்பவங்கள் காரணமாக இருந்தாலும், இனி எக்காரணம் கொண்டும் அவளை தன் வாழ்வில் தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான் பிரபு.

 

********

 

"சாய் ஆட்டிஸ்டிக் சிறப்பு பள்ளியின் முன்பு ஆட்டோ நின்றதும், அதில் இருந்து இறங்கிய நந்தினி, ஆட்டோகாரனுக்கு பணம் செலுத்திவிட்டு தனது தம்பியை அழைத்துக் கொண்டு  உள்ளே சென்றாள்… 

 

அங்கே இவளுக்கு முன் வந்துவிட்டிருந்த சில மாணவர்களின்  பெற்றோர்களை கண்டு புன்முறுவல் புரிந்தவள், ஆதவனை அவனது வகுப்பறையில் விடும் நேரம் சக ஆசிரியர் ஒருவர் வந்து அவளிடம், தலைமை பொறுப்பாளர்  அகிலா அழைப்பதாக கூற, தம்பியை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு அவரை காண சென்றாள்… 

 

இவளை கண்டதும், "வாம்மா நந்தினி… உட்காரு " என்றவர், "உன்கிட்ட முக்கியமான விஷயம் பத்தி பேசணும்… அதான் உன்னை வரச் சொன்னேன்…  " என்றதும், இருக்கையில் அமர்ந்தபடி "சொல்லுங்க மேம்…" என்றாள் நந்தினி.

 

"நம்ம பள்ளியை தொடர்ந்து நல்லபடியா நடத்த டிரஸ்ட் இல்லன்னா ஸ்பான்ஸர்ஸ் பண்ண  யாராவது கிடைப்பாங்களான்னு பல விதத்துல நாம முயற்சி பண்ணிகிட்டு இருக்கோம் இல்லையா… அதை கேள்விபட்டு ஒருத்தர் நமக்கு உதவி பண்ண முன்வந்திருக்காரு…"  என்றதும், 

 

"சூப்பர் மேம்… இது ரியலி குட் நியூஸ் …" என மகிழ்ந்தவள்,  " அந்த கிரேட் பர்சன் யாருன்னு நான் தெரிஞ்சிக்கலாமா…?" என்று நந்தினி கேட்க, 

 

"உண்மையிலேயே அவர் கிரேட்தான் நந்தினி அவர் வேற யாரும் இல்ல நம்ம ஓவியன் சார்தான்…" என்று அகிலா கூறியதும், அதை கேட்டு திகைத்தாள் நந்தினி. 

 

"ஆமா நந்தினி நம்ம ஓவியன் சாரேதான்… அடுத்தவாரம் ஓவிய கண்காட்சி நடத்தபோறாராம்… அதுல வர்ற மொத்த பணத்தையும்  நம்ம பள்ளிக்கு டொனேட் பண்றதா சொல்லியிருக்காரு… அதுபோக நம்ம குழந்தைகளின் ஓவியத்தையும் அவரோட கண்காட்சியில் வைக்க போறாராம்… 

 

எவ்ளோ பெரிய ஆப்பர்சூனிட்டி இது தெரியுமா… பல பிரபலங்கள் வர்ற இடத்துல நம்ம குழந்தைகளின் திறமையும் வெளிபட போகுறதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…" என்றதும் அவரது மகிழ்ச்சி நந்தினிக்கும் தொற்றிக் கொண்டது…  

 

"இந்த பொறுப்பை உன்கிட்ட ஒப்படைக்கிறேன் நந்தினி… ஓவியன் சார்கிட்ட விபரம் கேட்டு 

அதுக்கான ஏற்பாடுகளை நீயே முன்னிருந்து செஞ்சிடும்மா …" என்று அவர் கூற,  

 

"நானா… நான் எப்படி மேம்…"  சற்று திணறித்தான் போனாள். 

 

"எஸ் நீதான்… உன்னாலதான் இந்த காரியத்தை சரியா செய்ய முடியும்  நந்தினி… நீ இங்க வர்றதுக்கு முன்னாடி இந்த குழந்தைகளை பார்த்துக்க ரொம்ப சிரமபட்டேன்… ஆனா நீ வந்ததும் அந்த கவலை எனக்கு துளியும் இல்லாம பண்ணிட்ட… போதிய ஆசிரியர்கள் இல்லாம நான் தடுமாறினப்போ,  பெற்றவர்களை விட சிறந்த ஆசான் வேற யாரும் இல்லன்னு சொல்லி… இங்க உள்ள குழந்தைகளின் பெற்றோர்களையே ஸ்பெஷல் டிரைனிங் கொடுத்து அவங்களையே ஆசிரியர் ஆக்கின பெருமை உன்னைத்தான் சேரும்…" என நந்தினியின் திறமையை பாராட்ட, அவளோ மெல்லியதாக புன்னகைத்தாள்…

 

அவர் சொல்வதும் உண்மைதான்… சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சியில் பி.எட் பட்டம் பெற்ற அகிலா, தனக்கு சொந்தமான இடத்தில் தன் கணவனின் துணையுடன் இந்த பள்ளியை தொடங்கி அதை நல்லவிதமாக நடந்தி வந்தார்… திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும்  குழந்தைவரம் மட்டும் அவருக்கு கிட்டாததால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தன் பிள்ளையாகவே பாவித்து வந்தார்… இந்நிலையில் அவரது கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறைவனடி சேர்த்துவிட, பல நல்ல உள்ளங்களின் உதவி தொகையோடு இந்த பள்ளியை நடத்தினாலும் போதுமான வசதிகள் மற்றும் ஆசிரியர்கள்  இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான நேரத்தில்தான் நந்தினி தன் தம்பி ஆதவனை அந்த பள்ளியில் சேர்க்க வந்திருந்தாள்… 

 

அவள் படித்தது மென்பொருள் சம்மந்தமான படிப்பு  என்றாலும் சிறப்பு குழந்தைகளின் ஆசிரியர் பயிற்சியும்  ஏற்கனவே அவள் கற்றுக் கொண்டதால் தன் தம்பியை கவனித்துக் கொள்ளவென அந்த பள்ளியிலேயே ஆசிரியராக பணிபுரிய ஆரம்பித்தாள்… 

 

அகிலாவின் தன்னலமற்ற சேவையைக் கண்டு வியந்தவள், அவரது தடுமாற்றத்தை போக்க, பள்ளியின் வளர்ச்சிக்கு தன்னாலான உதவியும் கருத்துக்களையும் அவரிடம் சொல்ல ஆரம்பித்தாள்… அப்படி உருவானதுதான் நமக்கு நாமே என்ற  திட்டம் போல, பெற்றோர்களே தங்கள் பிள்ளையை பார்த்துக் கொள்ள ஆசிரியர்களாய் மாறிய கதை.  

 

நந்தினியின் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான  சுபாவம்… குழந்தைகளிடம் அவள் காட்டும் பொறுமை, அவர்கள் மீதான அக்கறை என நந்தினியை அகிலாவிற்கு மிகவும் பிடித்துபோனதால், பல நேரங்களில் அவளது ஆலோசனையை கேட்டு அதை அப்படியே நடைமுறைபடுத்துவார்… 

 

நந்தினிக்கும் அகிலாவிற்கும் ஒரே எண்ணம்தான், மற்ற சாதாரண குழந்தைகள் போல் இந்த சிறப்பு குழந்தைகளுக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும், இங்கிருந்து தேர்ச்சிபெற்ற குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டும்  என்பதில் உறுதியாக இருந்தவர்கள் அதற்கான வேலையிலும் இறங்கியிருக்கிறார்கள்…  

 

"ஓகேம்மா இதை சொல்லத்தான் கூப்பிட்டேன்…" என்றவர், மேலும் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி குறித்து அவளுடன் பேச ஆரம்பித்தார்…

 

******

 

மதிய வேளை தாண்டி, பசி வயிற்றை கிள்ளவும்தான் சாப்பிட வேண்டும் என்ற உணர்வே வந்தது பிரபுவிற்கு... ரஞ்சனி என்ன செய்கிறாள் என்று தன்  அறையின் கண்ணாடியே வழியே வெளியே பார்த்தவனுக்கு அவளது இடம் காலியாக இருக்கவும், 

 

'அதானே பார்த்தேன் டைம்க்கு சாப்பிட கிளம்பிடுவாளே… இங்க ஒருத்தன் பசியில வேலை பார்த்துட்டு இருக்கானேன்னு அவனையும் சாப்பிட கூட்டிட்டு போகணும்ன்னு கொஞ்சமாவது என் மேல அக்கறை இருக்கா இவளுக்கு…' என அவன் புலம்பிக் கொண்டிருக்க, அவனது மனசாட்சியோ 

 

'நீ ஆசையா பேசினா அக்கறை காட்டியிருப்பா … ஆனா நீ அவளை வெறுப்பேத்தியில்ல வேடிக்கை பார்க்கிற ராஸ்கல்… ' என்று நக்கல் செய்தது. 

 

அதில் புன்னகை புரிந்தவன், இருக்கையின் பின்னால் சாய்ந்து கைகளை தலைக்கு பின்னால் கோர்த்தபடி

 'என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல… அவகிட்ட அன்பா பேசுறதை விட, அவளை கோபபடுத்தி பார்க்கிறதுலதான் சுகமே  இருக்கு…' என்று கூற,  

 

அவனது மனசாட்சியோ 'அப்ப இந்த ஜென்மத்துல உன் காதல் கைகூடாது…' என பட்டென கூறவும், ஜெர்க் ஆன பிரபு, 

 

"அப்படியெல்லாம் சட்டுன்னு சாபம் கொடுக்ககூடாது… என் காதல் கைகூடலன்னா என் அமுல்பேபி  கை பிடிச்சி இழுத்தாவது கல்யாணம் பண்ணிப்பேன்…" என்று கூற,  

 

'கையை பிடிச்சி இழுத்தா கல்யாணம் நடக்காது தம்பி… ஜெயிலுக்கு போய் களி வேணா திங்கலாம்' என அவன் மனசாட்சி நக்கலடிக்க, 

 

"இப்படி நெகட்டிவ்வா பேசி என்னை டிஸ்கரேஜ் பண்றத விட்டுட்டு என் அமுல்பேபியை கரெக்ட் பண்ண ஏதாவது ஐடியா கொடு…" என்றதும், 

 

பாவம் பார்த்த அவனது மனசாட்சியோ,  "காதல் வந்தா காதலிக்கிற பொண்ணோட திங்க்ஸ் எல்லாம் அவளுக்கே தெரியாம சேகரிச்சி அவளை இம்ப்ரஸ் பண்ணலாம்…" என்றதும் 

 

பிரபுவோ  ரஞ்சனி அன்றாடம் என்னென்ன செய்வாள் என்பதை யோசித்து பார்த்தான்… வேலை நேரம் தவிர ஏன் வேலை நேரத்திலும் கூட , அவளது பாதி பொழுதுகள்  சாப்பாடு நேரத்தில் கழிவதைக் நினைத்து பார்த்தவன்… 

 

'அவ சாப்பிட்ட மிச்சத்தை எல்லாம் சேர்த்து வச்சா நாறிடாது… ' என்றபடி முகத்தை சுழித்தவன், "நெக்ஸ்ட்…"  என்றான்… 

 

அவனை முறைத்த மனசாட்சியோ, "திங்க்ஸ் சேகரிக்க முடியலன்னா அவளுக்கு பிடிச்ச சாப்பாட்டையாவது வாங்கி கொடு மேன்…" என்றதும்…

 

"ஆங் இந்த ஐடியா நல்லா இருக்கே…" என்று நினைத்தவன்,  அந்த கட்டிடத்தில் முதல்தளத்தில் இருக்கும் புட்கோர்ட்டிற்கு சென்றான்… அங்கே நான்கு பேர் அமரகூடிய இருக்கையில் ரஞ்சனியும் ஜெனியும் எதிரெதிரே அமர்ந்து சாப்பிட்டுக்  கொண்டிருந்ததைக் கண்டவன், 'ஓ அல்ரெடி மேடம் சாப்பிட ஆரம்பிச்சாச்சா…சரி இன்னொரு நாள் பார்த்துக்கலாம்…' எண்ணியபடி அவர்கள் அருகே சென்றான்.   

 

"ஹாய் கைஸ்…" என்றபடி ஜெனியின் அருகில் அமர்ந்தவன், அப்பொழுது அங்கு வந்த பேரரிடம் தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டு, ரஞ்சனியை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க,  அவளோ அவனை கண்டுக்காமல் சாப்பிடுவதிலேயே முனைப்பாக இருந்தாள்… 

 

அவளது கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு, "ஏன் பேபி  என்கிட்ட பேச மாட்டேங்கிற…? என்று பேச்சு அவளிடம் இருந்தாலும் பார்வை என்னவோ ரஞ்சனியின் மீதே இருந்தது… 

 

"நான் எப்ப மேடி  உன்கூட பேசாம இருந்தேன்…" என்று வாயில் உணவை அடைத்தபடி ஜெனி கேட்க,  

 

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ரஞ்சனி புறம் திரும்பியவன், "என்மேல அப்படி என்ன கோபம்…?" என்று கேட்க, 

 

"உன்மேல கோபமா… ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மேடி… நேத்துக்கூட உன் வீரதீர செயலை பாராட்டி உன்னை ஹக் பண்ணி கிஸ் கூட தந்தேனே?" என்றதும், சட்டென திரும்பி அவளை முறைத்தவன், கையை வாயில் வைத்து மூடு என்பதுபோல் சைகை செய்ய தன்னை வைத்து ரஞ்சனியிடம் கடலை போடுகிறான் என புரிந்ததும் கடுப்பானாள் ஜெனி… 

 

இப்பொழுது நேரடியாக  ரஞ்சனியிடமே, "ஏன் அமுல்பேபி என்னை பத்தின நல்ல அபிப்ராயமே உனக்கு வராதா…? ஏன் என்னை குத்தம் கண்டுபிடிக்கிறதுலேயே குறியா இருக்க…? எனக்குள்ள பொங்குற உன் மீதான காதல் ஏன் உனக்குள்ள பொங்க மாட்டேங்கிது…?" என்று அவன் சினிமா டைலாக் பேச, 

 

"பாலா இருந்தா பொங்கும் பச்சதண்ணி எப்படிடா பொங்கும்…?" என்ற ஜெனியின் கேள்வியில் இப்பொழுது பிரபு ஏககடுப்பு ஆனான் என்றால் ரஞ்சனியோ சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டாள்… 

 

"ஏய் நான்தான் உன்கிட்ட பேசலன்னு தெரியுதுல்ல… அப்புறம் எதுக்கு  நொய் நொய்ன்னு நடுவில புகுந்து டிஸ்டர்ப் பண்ணிகிட்டு இருக்க… போ போய் நான் ஆர்டர் பண்ண புட் ரெடியா இருந்தா வாங்கிட்டு வா…" என்று ஜெனியை அவன் விரட்ட, அவளும் அவனை முறைத்துக் கொண்டே எழுந்தாள்… 

 

"அமுல் பேபி…" என அவன் மீண்டும் ரஞ்சனியிடம் பேச ஆரம்பிக்கையில், 

 

"வெய்ட் வெய்ட் மேடி, அதென்ன இப்பல்லாம் ரஞ்சனியை அமுல்பேபின்னு கூப்பிடுற… என்ன விஷயம் ஹூம்…?" என மீண்டும் அவர்களுக்கு இடையில் ஜெனி மூக்கை நுழைக்க, இப்பொழுது அவள் மேல் கடுப்பை காட்டாமல்

 

"அதுவா?  இந்த அமுல் பட்டர் பார்த்திருக்கியா அமுல் பட்டர். அதுல கொழுக்மொழுக்குன்னு ஒரு பேபி படம் இருக்குமே… அத பார்த்தா எனக்கு அப்படியே  ரஞ்சனியை பார்க்கிற மாதிரியே ஒரு பீல் வரும்…" என பிரபு ரசித்து சொல்ல, 

 

"அப்ப அவளை வெண்ணெய்ங்கிற… பாரு ரஞ்சு  உன்னை எப்படி கேலி பண்றான்னு…" என்று சிரிப்பை அடக்கியபடி ஜெனி ரஞ்சனியிடம் அவனை கோர்த்துவிட ,  பிரபுவோ 'இப்படி ஒரு ஆங்கிள்ல நாம யோசிக்கவே இல்லையே என பேந்த பேந்த முழித்தான்…

 

ரஞ்சினியோ அவனை முடிந்த மட்டும் நன்றாக முறைத்துவிட்டு,  அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றுவிட, அதைக் கண்டு பல்லை கடித்தபடி ஜெனியின் புறம் திரும்பி அவளது  தலையில் ஒரு கொட்டு வைத்தவன் "ஏய் லூசு உனக்கு என்னதாண்டி வேணும்? எதுக்கு எப்ப பார்த்தாலும் எங்களை பிரிச்சிவிடுறதுலேயே குறியா இருக்க…?" என நிஜமாகவே கடுகடுப்புடன் கேட்டான் பிரபு… 

 

"ஹா ஹா நீதான் வேணும்…" என கண்ணடித்து அவள் கூற, 

 

மீண்டும் அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தவன் "நான்தான் உன்னை லவ் பண்ணல… பிரெண்ட்டாதான் நினைக்கிறேன்னு அன்னைக்கே உன்கிட்ட சொல்லிட்டேன்ல… அப்புறமும் ஏன்டி லவ்வு ஜவ்வுன்னு சொல்லி என் உயிரை வாங்குற…" என்றான் எரிச்சலுடன்… 

 

"ஹலோ மேடி நான் எப்ப உன்னை லவ் பண்றதா சொன்னேன் ஹூம்…  ஒரு காலத்துல உன் மேல எனக்கு கிரஷ் இருந்தது என்னவோ உண்மைதான்… அதை லவ்வுன்னு நினைச்சு உன்கிட்ட பிரபோஸ் பண்ண ரஞ்சினிகிட்ட ஐடியா கேட்க... அவ என்ன காண்டுல இருந்தாளோ  உன்னை பத்தி இல்லாததும் பொல்லாததுமா சொல்லி என் வாயாலயே உன்னை அண்ணான்னு சொல்லவச்சிட்டா… நீயும் பிரெண்டோட தங்கச்சி என் தங்கச்சி மாதிரின்னு டிஆர் டைலாக்கெல்லாம் பேசி என் மனசை சுக்குநூறாக்கிட்ட…  

 

நான் ஒருத்தனை அண்ணான்னு சொல்லிட்டா, மறுபடியும் அவனை  கண்டிப்பா சைட் அடிக்க மாட்டேன்… சோ  இனிமேல் உன்மேல லவ் வர்றதெல்லாம் சான்ஸே இல்லப்பா… " என்றவள், 

 

பின்பு குறும்புடன், "அப்போ எதுக்கு நீதான் வேணும்னு கொஞ்சநேரம் முன்னாடி சொன்னேன்னு யோசிக்கிறியா…  ஹா ஹா நான் மட்டும் சிங்கிள்லா சுத்தும் போது… உன்னை மட்டும் எப்படிடா உன் அமுல்பேபிகூட மிங்கிள் ஆகவிடுவேன்…?" என்றபடி தன் வலது கை ஆள்காட்டி விரலை மடக்கி பழிப்பு காட்டியவளை கொலைவெறியுடன் பார்த்தான் பிரபு,

 

அவனை சமாதானம் செய்வது போல், "வேணும்ன்னா இதுக்கு ஒரு சொல்யூஷன் சொல்லவா மேடி …" என்று  அவள் கேட்க பிரபுவோ என்ன என்பது போல் அவளை நெற்றி சுருக்கி பார்த்தான்… 

 

அவளோ  இருக்கையில் இருந்து மெல்ல எழுந்தவள்,  அவனது கைக்கு சிக்காதவாறு இரண்டடி தள்ளி நின்றுக் கொண்டு  குறும்புடன், "என் அழகுக்கும் அறிவுக்கும் ஏத்த மாதிரி ஒரு ஹேன்சம் ஃபிகரை சீக்கிரம் எனக்கு செட் பண்ணி விட்டா … அடுத்த நிமிஷம் உங்க ரெண்டு பேரோட லவ்வை நானே  முன்னிருந்து சேர்த்து வைக்கிறேன்… எப்படி டீல் ஒகேவா…" என்று அவள் சொல்லிமுடிக்கவில்லை, 

 

"அடிங்க… என்னை பார்த்தா எப்படி தெரியுது...

விட்டா என் தொழிலையே மாத்திடுவ போல…" என்று கத்தியபடி அவளை துரத்தியவனின்  முகத்தில் புன்னகையே நிறைந்திருந்தது அந்நாளின் நினைவில்…

 

"காதலிக்கும் ஆசை இல்லை

கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூதது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே நான் உன்னை காணும் முன்னால்

என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்

என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்

நான் தொட்டுகொள்ள கிட்ட வந்தால்

திட்டி திட்டி தித்தித்தாய்…" 


Unknown, Rachel, Chitra Balajii and 2 people liked
Quote
(@punitha)
Trusted Member
Joined: 2 years ago
Posts: 83
 

அப்ப ரஞ்சு வளைகாப்புக்கு போகபோறா🤭

ஆனாலும் அநியாயத்துக்கு அவளை கடுப்பேத்துறான் பிரபு🙄

என்னைக்கு திருப்பி வச்சு செய்வாளோ தெரியல😂😂

ஆமா கண்டாங்கிப்பட்டில அப்படி என்னதான் நடந்துச்சு🤔 கேட்டாளே காண்டாகுற அளவு🤭🤭

பிரபுங்கற கவுண்டமணியோட செந்தில் மாதிரியா ஜெனி😂

நந்தினி ஏன் ஓவியன்ங்கற பேரை கேட்டு அதிரனும்🤔

யாரு அது🤔🤔

மொத்தத்துல சூப்பர் யூடி🥰🥰🥳🥳


ReplyQuote
(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

@punitha

தேங்க்யூ புனிதா😍😍😍

கண்டாங்கிபட்டியில...🙄🙄 கண்டாங்கிபட்டியில 🙄🙄அது வந்து🤔🤔🤔 என்ன நடந்ததுன்னா...🤔🤔🤔 எனக்கே தெரியலையேம்மா😁😁


(@punitha)
Trusted Member
Joined: 2 years ago
Posts: 83
 

@mohana-karthik

ஆஹான்🙄🙄

நம்புறமாதிரி இல்லயே 🤔


ReplyQuote
(@deepashvini)
꧁எழுத்தாளர்꧁᭄ Admin
Joined: 2 years ago
Posts: 855
 

 கண்டாங்கிபட்டியில் அப்படி என்னய்யா நடந்தது🙄🙄

 

என்கிட்ட சொல்லவே இல்ல😡😡😡😡


Unknown and punitha liked
ReplyQuote
(@punitha)
Trusted Member
Joined: 2 years ago
Posts: 83
 

@deepashvini

நம்பிட்டேன்🙄🙄


ReplyQuote
(@unknown)
Eminent Member
Joined: 2 years ago
Posts: 39
 

Lovely ud mohi maa😍😍😍😍prabhu ooda settaiumm saitummahhh seeshamaa erukku ud🤣🤣🤣🤣🤣rajesh  kitta kooda sollatha kandaanghipatti raghasiyam enghalukku sollalamee😜😜😜😜erunthalum. Lip lock slip aaghiii eppadi door lock aaghi erukkavenammm😏😏😏😏😏nandini ooda pair thaa ooviyan ahhh.... Avantha prabhu ooda friend ahhh🤔🤔🤔🤔🤔


(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

@saranya-srinivas

Thank you saranya 😍😍😍


ReplyQuote
Share:
6
6