Views 1,502,723 

Notifications
Clear all

கனவுகள் 2


(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

 

ஹாய் ஹாய் நட்பூஸ்…

எல்லாரும் எப்படி இருக்கீங்க…?

இதோ “கொஞ்சம் கனவுகள் கொஞ்சும் நினைவுகள்…” அத்தியாயம் 2 பதித்திவிட்டேன்…

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… போன அத்தியாயத்திற்கு கருத்து மற்றும் லைக் பட்டனை அழுத்திய அனைத்து நட்புகளுக்கும் நன்றிகள்

என்றும் அன்புடன்,
உங்கள்
மோகனா கார்த்திக்😍😍😍

 

****

மோகனா கார்த்திக்கின்,

"கொஞ்சம் கனவுகள்…!!! கொஞ்சும் நினைவுகள்…!!!"

 

கனவு 2

 

ஓம் சாய் ராம் 

 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

 

எம்எஸ் சுப்புலட்சுமியின் தேன்குரல், அந்த எப்எம் ரேடியோவில் கசிந்து அந்த காலை பொழுதை இனிமையாக்கி கொண்டிருக்க,  தனது வாழ்விலும் அந்த ஆயற்பாடி கண்ணன் இருக்கும்வரை தனக்கேது குறை என்பது போல் நந்தினியும் அந்த பாடல் வரிகளை மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தாள்… பக்தியுடன் அவளது வாய் பாடலை பாடிக் கொண்டிருந்தாலும், அவளது கைகளோ  காலை மற்றும் மதிய உணவை தயார் செய்துக் கொண்டிருந்தது… 

 

அப்பொழுது அவளது சேலை முந்தானையை ஒரு தளீர்கரம் பற்றி இழுக்க, அந்த கரத்திற்கு சொந்தகாரன் யார் என்பதை உணர்ந்து புன்னகையுடன் திரும்பி பார்த்தவள், 

 

"ஆதி எழுந்துட்டியா... ? குட் பாய்… சரி போங்க  சீக்கிரம் பிரஷ் பண்ணிட்டு வாங்க… அதுக்குள்ள நந்துமா உனக்கு ஹார்லிக்ஸ் கலக்கி வைக்கிறேன்…?" என குழந்தைக்கு சொல்வது போல் தன் தம்பியிடம் பேசிக் கொண்டிருக்க, ஆதவனோ அவளது பேச்சை கேட்காமல் அவளது முந்தானையை பிடித்து இழுப்பதிலேயே குறியாக இருந்தான்… 

 

அவனது தேவை என்னவென்று அவளுக்கு புரிந்தாலும்,  அதை அவனே செய்ய வேண்டும் என்று எண்ணிய நந்தினி… "நோ ஆதி நந்துமாக்கு நிறைய வேலை இருக்கு… சோ இன்னைக்கு நீங்களேதான் பிரஷ் பண்ணிக்கணும்…" என்று கூறிவிட்டு விட்ட வேலையை  தொடர்ந்து செய்ய ஆரம்பித்தாள்… 

 

ஆனால் ஆதவனோ உடனே அதை செய்யாமல் அவளது ஆடையை பற்றியபடி  அவள் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின்னால் சென்றானே தவிர, அவள் கூறியதை செய்யவில்லை… நந்தினியும் அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, ஆதவன் என்ன நினைத்தானோ, நந்தினியை விட்டுவிட்டு குளியல் அறை செல்லாமல் நேராக ரஞ்சனியின் அறைக்கு சென்றான்… அதை பார்த்துக் கொண்டிருந்த நந்தினிக்கோ இன்னும் சற்று நேரத்தில் நடக்கப் போகும் கலவரத்தை நினைத்து அவளது இதழோரம் லேசாக  புன்னகை வந்தது…

 

அவள் நினைத்தது போலவே சிறிது  நேரத்தில் ரஞ்சனியின் அறையில் இருந்து "ஆதிஈஈஈஈஈஈ…." என்ற கோபமான குரல் சத்தமாக கேட்க, அங்கே என்ன நடந்திருக்கும் என்று யூகித்த நந்தினியோ தன் தங்கையின் நிலையை எண்ணி பக்கென சிரித்துவிட்டாள்…

 

தான் அழைத்தும் வர மறுத்த நந்தினியை விட்டுவிட்டு ரஞ்சனியின் அறைக்கு சென்ற ஆதவன், தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சினியை சிறிது நேரம் பார்த்தபடி நின்றிருந்தான்… பின்பு மெல்ல அவளிடம் சென்றவன் அவள்  போர்வையை பிடித்து இழுக்க, 

 

ரஞ்சனியோ, "ம்ப்ச்  டிஸ்டர்ப் பண்ணாதே நந்து…  தூங்க விடு பிலீஸ்…" என்றபடி விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தாள்… கும்பகர்ணியின் தங்கை  என்று சொல்லும் அளவிற்கு ரஞ்சினியை தூக்கத்தில் இருந்து எழுப்புவது மிகவும் கடினம் என்பதால் ஆதவன் அவள் எழாததைக் கண்டு என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தான்… 

 

முன்னொரு நாள் ரஞ்சனியை எழுப்புவது எப்படி என்று  நந்தினி ஆதவனுக்கு ரகசியமாக சொல்லி கொடுத்தது அவனுக்கு நினைவுக்கு வந்தாலும் அதை உடனே செயல்படுத்த அவனது மூளை கட்டளையிடவில்லை… இருந்தாலும் கற்றது கைபழக்கம் செந்தமிழ் நாவழக்கம் என்பது போல் நந்தினியின் சிறப்பு பயிற்சியால் உண்டான உந்துதலில்  ஆதவனின் கைகள் தானாக உயர்ந்து கட்டிலின் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை பற்றியது… 

 

பின்பு அதன் மூடியை திறந்தவன்,  தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சனியின் மீது அதை அப்படியே  கவிழ்க்க, உறக்கத்தில் இருந்த ரஞ்சனியோ ஜில்லென்ற நீர் தன்மீது பட்டதும் திடுக்கிட்டு கண்விழித்தவள், அந்த செயலை  செய்த தன் தம்பியின் மீது கோபம் கொண்டு "ஆதிஈஈஈஈ…" என்று கத்திவிட்டாள்…

 

ரஞ்சனியின் காட்டு கத்தல் கேட்டு ஆதவனுக்கு அசௌகரியமாக இருக்க,  கைகளால் தன் காதை பொத்திக் கொண்டவன், "ஆஆஆஆஆ…." என தானும் அலற ஆரம்பித்துவிட்டான்… 

 

தம்பியின் அலறலில் தன் தவறை உணர்ந்த  ரஞ்சனி, ஆதவனை தன் அருகே அழைத்து, 

"சாரி சாரி ஆதி… நான் தூங்கிட்டு இருக்கும்போது என் மேல தண்ணியை ஊத்துனியா அதான் அக்காவுக்கு கோபம் வந்திடுச்சு… " என்று அவள் சமாதானபடுத்தியும் கேட்காமல் அவன்  அலறிக் கொண்டிருக்க, 

 

"அதான் சாரி சொல்லிட்டேனே ஆதி…  இனி இடியே விழுந்தாலும் இந்த ரஞ்சனி என் குட்டி தம்பியை கோவிச்சிக்க மாட்டா…" என்று கெஞ்சலும் கொஞ்சலிலும் இறங்கியவளைக் கண்டு மனமிறங்கிய ஆதவனோ, சட்டென அழுகையை நிறுத்திவிட்டு அவளது கைபிடித்து இழுத்தான்… 

 

எங்கு அழைக்கிறான் என தெரிந்தும் அவன் வாய்மொழயாக கேட்க எண்ணிய ரஞ்சனி,  "ஆதி எதுவா இருந்தாலும் என் கண்ணை பார்த்து, வாய் திறந்து பேசணும்ன்னு சொல்லியிருக்கேன்…" என்றதும் அவளது கண்களை நேருக்கு நேராக சந்தித்த ஆதவன், பாத்ரூம் என்று கூறி குளியல் அறையை  சுட்டிக் காட்டினான்…

 

'அடேய் பல்லு விளக்காம பெட் காபி குடிச்சி பழக்கபட்டவளை தினமும் உன்கூட சேர்ந்து பிரஷ் பண்ண சொல்லி ரொம்ப கொடுமைபடுத்துறடா ஆதி…' என மனதுக்குள் நொந்தவள், அதை வெளியேகாட்டாமல் பெருமூச்சுடன் தன் தம்பியை அழைத்துக் கொண்டு அவனது குளியல் அறைக்குள் சென்றாள்… அவனுடன் சேர்ந்து தானும் பிரஷ் செய்தவள், ஆதியை குளிக்க வைத்து, அவனுக்கு உடைமாற்றி பள்ளிக்கு செல்ல அவனை ஆயத்தப்படுத்தினாள்.  

 

இதையெல்லாம் ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தன் தமக்கையைக் கண்டு  "இதெல்லாம் உன் பிளான்தானே… நீதானே தண்ணி ஊத்துற பழக்கத்தை அவனுக்கு சொல்லி கொடுத்த ?" என்று சரியாக யூகித்து கடுப்புடன் கேட்டவளிடம்…  காபி கப்பை கொடுத்த நந்தினி, "சின்ன குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுக்கும் போது நாமளும் அதை பாஃலோ பண்ணியிருக்கணும் ரஞ்சுமா… நாளை பின்ன ஆதி உன்னை திருப்பி கேள்வி கேட்டுட கூடாது பார்… அந்த நல்ல எண்ணத்துலதான் அப்படி செஞ்சேன்…" என்று  கண்ணடித்து கூறியவள் ஆதியிடம் ஹார்லிக்ஸை கொடுத்து குடிக்க சொன்னாள்… 

 

ரஞ்சனியோ நந்தினியின் பேச்சில் மேலும் கடுப்பாகி, "விசம் விசம்… என்னை சுத்தி இருக்கிற அப்புட்டு  பேரும் விசம்… இவங்க மத்தியில அப்பாவியான என்னை படைச்சி இப்படி கஷ்டபடுத்துறியே ஆண்டவா…" என சத்தமாக புலம்பியவள்  தன் அறைக்குள் சென்று, குளித்து முடித்து அலுவலகம் செல்ல தயாரானாள்… 

 

வெளீர் நிற ஜீன்ஸ் மற்றும் இளம்சிவப்பு நிற  டாப் அணிந்து, தோள்வரை வெட்டிய தலைமுடியை போனிடையில் இட்டு, நவநாகரீக மங்கையாக ரஞ்சனி வெளியே வர, அதே நேரத்தில் நந்தினியோ ரோஜா வண்ண காட்டன் புடவை அணிந்து, தனது நீண்ட தலைமுடியை அழகாக பின்னலிட்டு குடும்ப பாங்கான அழகுடன் தயாராகியிருந்தாள்… ஆதவனுக்கு காலை உணவை ஊட்டியவள்,  தானும் ரஞ்சனியுடன் இணைந்து சாப்பிட்டாள்.

 

அதன்பிறகு கதவை பூட்டிவிட்டு மூவரும் வெளியே வர, அப்பார்மென்ட் பார்க்கிங்கில் இருக்கும் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ரஞ்சனி தான் வேலை பார்க்கும் "வி.பி ஈவன்ட் மேனேஜ்மென்ட்…" அலுவலகத்திற்கு சென்றுவிட, நந்தினியோ தான் வழக்கமாக செல்லும் ஆட்டோவில் ஆதவனை அழைத்துக் கொண்டு, தான் பணிபுரியும் "சாய் ஆட்டிஸ்டிக் சிறப்பு பள்ளி…" யை நோக்கி சென்றாள்…

 

அங்கே பணிபுரிகிறாள்  என்று சொல்வதை விட, தனது தம்பியை போல் இருக்கும் பல குழந்தைகளுக்கு அவரவர் திறமைக்கேற்ப பயிற்சியளித்து, அவர்களது உலகத்திலேயே நின்று விடாமல் இந்த பரந்த உலகத்தையும் எதிர்நோக்கும்  தனிதிறமையை கற்றுக் கொடுக்கிறாள் என்று கூறலாம்…

 

ஆதவனுக்கு என்ன பிரச்சனை…? அவன் ஏன் சிறப்பு பள்ளிக்கு செல்கிறான்…? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்… அதற்கான விடை ஆதவன் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை… இன்பம், துன்பம், கோபம்,  கவலை, இதுபோல் எந்த உணர்வும் இல்லாமல், அன்பால் மட்டுமே தங்களை அணுக முடியும் என்றபடி தங்களுக்கான உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆட்டிசத்தால் பாதிக்கபட்ட குழந்தை… 

 

பிறந்து பத்து மாதம் ஆகியும் தாயின் முகம் பார்த்து சிரிக்காமல், மழலை மொழியில் பிதற்றாமல், பெயர் சொல்லி அழைத்தால் திருப்பி பார்க்காமல் இருப்பது என மற்ற 

குழந்தைகளிடம் தென்படும்  எந்தவித துள்ளளும் இல்லாமல் தனித்து தெரிந்தவனைக்  கண்டு சந்தேகம் கொண்ட நந்தினியின் அன்னை, மருத்துவரிடம் அவனை காண்பிக்க, சிலபல பரிசோதனைகள்  செய்த மருந்துவர் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கபட்டிருப்பதாக கூற, அதைக் கேட்டு சற்று கலங்கித்தான் போனார் …

 

அவரது கலக்கத்தை போக்கும் விதமாக ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஆதவனின் அன்னையிடம்  கூற ஆரம்பித்தார் மருத்துவர்… ஆட்டிசம் என்பது மனநல குறைபாடு அல்ல, மூளையில் ஏற்படும் ஒருவித மதியிறக்கம்….  அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மொழித் திறன், பேச்சுத் திறன், மற்றவர்களோடு கலந்து பழகும் திறன், நடத்தைத் திறன், ஒருங்கிணைப்புத் திறன் இவற்றில் எல்லாம்  பின்தங்கி இருப்பார்கள்.

 

பொதுவாக இந்த ஆட்டிசத்தின் அடிப்படை காரணம் குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை. நெருங்கிய உறவுத் திருமணங்களும்,  மிகவும் தாமதமான திருமணமும், தாமதமான குழந்தைப் பேறும் ஆட்டிசத்தின் முக்கிய காரணங்களாகின்றன. சில சமயம் இது பரம்பரையாக தொடரவும் வாய்ப்பிருக்கிறது… 

 

ஆட்டிசத்தை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், தற்போதைய மருத்துவ வளர்ச்சிகளின் மூலம், அதை கட்டுப்படுத்த முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி (Occupational therapy) மற்றும் பிஹேவியர் தெரபி (behaviour therapy) தொடர்ச்சியாகத் தரப்பட வேண்டும். பொதுவாகவே ஆட்டிசம் இருப்பவர்களுக்கு, அவர்களின் மூளை, முன் ஈடுபாட்டில் (pre-occupied) இருக்கும் என்பதால், அவர்களை நாம் உணர்வு ரீதியாகவே அணுக வேண்டும். அன்பும் அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான் அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்…" என மருத்துவர் தெளிவாக எடுத்துரைக்க, அதை கவனமாக கேட்டுக் கொண்டார் நந்தினியின்  அன்னை. 

 

பொதுவாக ஆட்டிசம் பாதிக்கபட்ட நபரை விட, அவர்களை கையாள தெரியாமல் அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள்தான் மிகுந்த மனஉளச்சலுக்கு தள்ளபடுவார்கள்… 

 

ஆனால் நந்தினியின் அன்னையோ  தன் வாழ்வில் பல இன்னல்களை தாண்டி வந்த இரும்பு பெண்மனியாதலால், நொடிபொழுதில் தன்னை சுதாகரித்துக் கொண்டவர், ஆதவனை எப்படி கையாள வேண்டும், அவனுக்கான சிகிச்சை முறைகள்  என்ன என்பதை தெளிவாக மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டவர் அதற்கு ஏற்றார்போல் வரும் காலங்களில் அவனை கவனித்தும் கொண்டார்… 

 

அவருக்கு பிறகு ஆதவனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நந்தினி விருப்பத்துடன் ஏற்றுக்  கொள்ள, அவர்கள் இருவருக்கும் உறுதுணையாக இருக்கின்றாள் ரஞ்சனி… 

 

அலுவலகம் வந்ததும் பார்க்கிங் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை நிறுத்திய ரஞ்சனி, பக்கத்தில் நின்றிருந்த வாகனத்தைக் கண்டு, "ஓ சீக்கிரம் வந்துட்டானா… நாம மெதுவாவே போவோம்… என்ன பண்ணிடுவான்?" என அலட்சியத்துடன் நினைத்தபடி ஸ்கூட்டி சாவியை கைகளால் சுழற்றியபடி அந்த கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் இருக்கும் "விபி ஈவன்ட் மேனேஜ்மென்ட்…" என்ற பெயர் பொறிக்கப்பட்ட கட்டிடத்தின் உள்ளே நுழைந்தவள் தன்னுடன்  வேலை பார்க்கும் சகாக்கள் அனைவருக்கும் உற்சாகமாக காலை வணக்கம் சொன்னவள், பின்பு தனக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் கணினியின் முன்பு அமர்ந்து தனது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். 

 

இங்கே அவள் வரவுக்காக காத்திருந்தவனோ  ரஞ்சனியின் நடவெடிக்கைகளை சிசீடிவி கேமிரா மூலம் தன் கணினியில்  பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் கேலியாக வளைந்தது… "என்னவோ இவ அப்பன் வீட்டு ஆபிஸ்க்கு வர மாதிரி எவ்ளோ சாவகாசமா வர்றா பார்த்தியாடா… எல்லாம் நீ கொடுக்கிற இடம்…" என தனக்கு தானே திட்டிக் கொண்டவன், அரைமணி நேரம் கடந்தும் தன்னை காண அவள் வராததைக் கண்டு, 

 

"எப்பதான் என் கேபின்குள்ள வர்றான்னு பார்க்கிறேன்…" என நினைத்தபடி அலாக்ஸாவிடம்(நவீன ரேடியோ பெட்டி) தன் மனதிற்கு பிடித்த பாடலை ஒலிக்க சொல்லிவிட்டு தன் வேலையை தொடர ஆரம்பித்தான்…

 

ஆனால் ரஞ்சனியோ தன்முன் இருந்த கணினியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாலும், அவளது மனமோ நேற்று  நடந்த சம்பவத்தையே அசைபோட்டுக் கொண்டிருந்தது… 

 

மும்பையில், அந்த புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலில் உள்ளே இருந்த ஓர் பகுதியில் பார்ட்டி களை கட்டிகொண்டிருக்க... அதை விழாவை ஏற்பாடு செய்திருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தான் நமது கதாநாயகன் பிரபு எனும்  வெங்கட் பிரபு… விபி ஈவென்ட் மேனேஜ்மென்ட்டின் உரிமையாளன்… 

 

தனது பிஸ்னஸ் டீல் வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் அந்த நிகழ்வின் தொகுப்பை நல்லபடியாக முடித்துக் கொடுத்த பிரபுவிற்கு   நன்றி தெரிவிக்கும் விதமாக, அவனையும் அவனது சகாக்களையும் தன்னுடைய பார்ட்டிக்கு அழைத்திருந்த அந்த பெரிய மனிதர்… மேலும் தனது நண்பர்களிடமும் பிரபுவை அறிமுகபடுத்தி வைத்தார்… 

 

அவனும் அந்த பெரிய மனிதர்களிடம்  சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் நேரம்,  பேரர் வந்து மதுபானம் அடங்கிய ட்ரேயை அவர்கள் முன் நீட்ட நாகரீகம் கருதி அதில் ஒரு மதுகோப்பையை எடுத்தவன் மற்றவர்களுடன் பேசிக் கொண்டே  அதை சிப் பை சிப்பாக அருந்த தொடங்கினான்... 

 

சிறிது நேரம் கழித்து அவனது பார்வை தன் சகாக்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி செல்ல... அங்க இருவர் மட்டும் இல்லாததைக் கண்டு புருவம் சுருக்கியவன் தன் பார்வையை அந்த அறையெங்கும் சுழலவிட்டான்... 

 

அங்கே ஒர் இடத்தின் ஓரத்தில், மங்கலான விளக்கொளி வெளிச்சத்தில்  தான் கண்ட காட்சியில் பதறியவன், பேசிக் கொண்டிருந்த அந்த பெரிய மனிதர்களிடமிருந்து  "எக்ஸ்கியூஸ் மீ..." என்றபடி விடைபெற்று நொடியும் தாமதிக்காமல் அந்த இடத்தை நோக்கி விரைந்தான்

 

ரஞ்சனியும் அந்த பார்ட்டியில் பங்குபெற்ற ஒருவனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்க, அவர்கள் பக்கத்தில் கண்கள் கலங்க நின்றிருந்தாள் ஜெனி… பிரபுவின் உற்ற தோழி… அவனின் அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறாள்…  

 

ரஞ்சனியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவனோ  ஜெனியை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு பல் இளித்துக் கொண்டே ஏதோ கூறவும், அதைக் கேட்டு ஆத்திரம் பெருக  அவனை அடிக்க கையை ஓங்கிவிட்டாள் ரஞ்சனி… 

 

கொஞ்சம் விட்டிருந்தால் அவனின் வாய் வெத்தலை பாக்கு போட்டிருக்கும் … அப்படி நடக்கவிடாமல் தக்க சமயத்தில் அங்கு பிரசன்னம் ஆன பிரபு "ஏய் ரஞ்சனி என்ன பண்ற…" என்றபடி அவள் கைபிடித்து அவளது செயலை  தடுத்து நிறுத்தியிருந்தான் …

 

ரஞ்சனியோ அவனுக்கு பதில் கூறாமல் தன் எதிரில் இருந்தவனை  முறைத்துக் கொண்டிருக்க, ஜெனியோ பிரவுவை கண்டதும் அழ ஆரம்பித்துவிட்டாள்...

 

ரஞ்சனியின் முறைப்பை அலட்சியம் செய்த பிரபு,  ஜெனியின் தோளில் கைப்போட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டவன், "வாட் ஹேப்பன்ட் ஜெனி…" என்று அவளிடம் விபரம் கேட்டான்… 

 

அதற்கு அவள் "மேடி… இவன்…என்கிட்ட" என அவள் பதில் கூறும் முன் அவளை முந்திக் கொண்ட புதியவன், "அது ஒன்னும் பெரிய விஷயமில்ல பாஸ்… இன்னைக்கு நைட் எனக்கு கம்பெனி கொடுக்க முடியுமான்னு கேஷூவலாதான்  கேட்டேன்… அதுக்கு பதில் சொல்லாம இதோ இந்த லேடி ஜாக்கிஜானை கூட்டிகிட்டு வந்து பஞ்சாயத்து பண்ணது இந்த பொண்ணு… பார்க்க நாகரீகமா இருக்காளே… டிரிங் ஸ்மோக் எல்லாம் பண்ணினாளே… ரொம்ப தாராளமான மனசு இருக்கும்ன்னு நினைச்சு கேட்டா தேவையில்லாம  சீன் கிரியேட் பண்ணிகிட்டு இருக்கா…" என்று சற்று எரிச்சலுடன் கூறியவனை கொலைவெறியுடன் பார்த்த ரஞ்சனி…

 

"பார்க்க நாகரீகமா இருந்தா படுக்கைக்கு கூப்பிடுவியாடா  ராஸ்கல்…" என்று கோபத்தில் அவன் மீது மீண்டும் பாய போக, 

 

"ஸ்டாப் இட் ரஞ்சனி…" என்றபடி ஜெனியை விடுத்து மீண்டும் ரஞ்சனியின் கைபிடித்து  அவளது செயலை தடுத்து நிறுத்திய பிரபு, 

 

அவளது திமிறலை அடக்கியபடியே, ஜெனியிடம்,    "அவர் கேட்டதுல உனக்கு உடன்பாடு இருந்தா ஓகே சொல்லியிருக்கணும்… இல்லன்னா நோ சொல்லிட்டு கொடுக்க வேண்டியதையும் கொடுத்துட்டு சத்தமில்லாம  போயிட்டே இருந்திருக்கணும்… அதைவிட்டுட்டு இப்படி பார்ட்டிக்கு வந்த இடத்துல எதுக்கு சீன் கிரியேட் பண்ற…" என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல்  ரஞ்சனி பார்த்தாள் என்றால் ஜெனியோ நண்பன் கூற வருவதை புரிந்துகொண்டதன் அடையாளமாக அவளது முகம் மலர்ந்தது…

 

பிரபுவிடமிருந்து தனது கையை உருவிக் கொண்ட ரஞ்சனியோ அவனையும் புதியவனையும் பார்த்து கோபமாக  "ச்சே நீங்க எல்லாம் மனுஷனுங்களே கிடையாது… ஒரே குட்டையில ஊறின தவக்களைங்க… உங்களோட ஆம்பளை புத்தி இப்படித்தானே போகும்…" என்றபடி வார்த்தையை கடித்து துப்பியவள், பிரபுவை நன்றாக முறைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு விறுவிறுவென வெளியேறி செல்ல, 

 

அவளது கோபத்தை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்த பிரபுவோ, அவள் கோபித்துக் கொண்டு தனியாக செல்வதைக் கண்டு ஜெனியிடம் கண்காட்ட, அவளோ அவனின் கண்ணசைவின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டு ரஞ்சனியின் பின்னால் சென்றாள்…

 

தான் என்ன சொல்ல வருகிறேன் என புரிந்துக் கொள்ளாமல் தய்யதக்காவென குதித்து கோபம் கொள்ளும் ரஞ்சனியின் அவசரபுத்தியை நினைத்து, "ரொம்ப கஷ்டம்டா பிரபு…" என்று தன்னைதானே நொந்தபடி அந்த புதியவனை நோக்கி திரும்பியவன், 

 

"இந்த பொம்பளைங்களே இப்படித்தான் சார்… ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்குவாங்க… ஒரு பிரச்சனையை எப்படி சுலபமா முடிக்கிறதுன்னு அவங்களுக்கு தெரியவே தெரியாது…" என்றவன், 

 

"சரி நீங்க வாங்க சார்  நாம ரெஸ்ட் ரூம் போகலாம்…" என்று  அவனை அழைக்க, 

 

புதியவனோ பிரச்சனை இல்லாமல் தான் தப்பித்ததில் நிம்மதி அடைந்தவன், பிரபு ரெஸ்ட் ரூம் கூப்பிடவும், எச்சரிக்கை உணர்வுடன், "எதுக்கு…?" என்று கேட்டான்.

 

"ரெஸ்ட் ரூம் எதுக்கு போவாங்க சார் … எல்லாம்  அதுக்குதான்…" என்று கண்ணடித்து அவன் கூற, 

 

"அவனா நீ…" என்பது போல் அதிர்ந்து பார்த்த அந்த புதியவன் … "உனக்கு வந்தா நீ போ மேன் என்னை ஏன் கூப்பிடுற... " என்றபடி  அவ்விடம் விட்டு நைஸாக நழுவ பார்த்தான்  

 

பிரபுவோ அவனை நகரவிடாமல்  அவன் தோளில் கைபோட்டவாறே…" சும்மா வாங்க சார் எனக்கு கம்பெனி கொடுங்க…" என்றபடி ரெஸ்ட் ரூம் உள்ளே அழைத்து செல்ல, சிறுபயத்துடனே அவன் பின்னால் சென்றான் அவன்…

 

ரெஸ்ட் ரூம் உள்ளே  வந்த பிரபு, அங்கிருந்த ஒரு சிலர் வெளியேறும் வரை பொறுத்திருந்துவிட்டு,  யாரும் இல்லாததை உறுதிபடுத்துக் கொண்டவன், அந்த புதியவனிடம், "என்கிட்ட கேட்டுருந்தா நானே இதுக்கு  சுலபமா பதில் சொல்லியிருப்பேனே… அதை விட்டுட்டு ஏன் சார் அவகிட்ட நேரடியா அப்ரோச் பண்ணீங்க … பாருங்க உங்களால தேவையில்லாத பிரச்சனை இங்க நடந்திருக்கும்…" என்று அவன் கூறியதும்தான் தாமதம், அதுவரை இருந்த  பயம் நீங்கி முகம் மலர்ந்த அந்த புதியவன்… 

 

"ரொம்ப நன்றி பாஸ் நீங்க மட்டும் சரியான சமயத்துல வராம இருந்திருந்தா என் இமேஜை டேமேஜ் பண்ணியிருப்பாங்க அந்த ரெண்டு பொண்ணுங்களும்…" என்றவன் 

 

"இப்ப கேட்குறேன் பாஸ்… எனக்கு அந்த மார்டன் பொண்ணை விட, அவளுக்காக எகிறிட்டு வந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு… அவளை செட் பண்ணி கொடுத்தா எனக்கு டபுள் ஓகே பாஸ்…" என்று அவன் கோணல் சிரிப்புடன் கேட்க, அதைக் கேட்டு  உள்ளுக்குள் கோபம் தாறுமாறாக பொங்கினாலும் வெளியே சிரிப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருந்த பிரபு, 

 

"சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சா…? எத்தனை குழந்தைங்க…?" என்று சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்டான்.

 

"ஆண் இரண்டு… பெண் இரண்டுன்னு நான்கு குழந்தைகள் பாஸ்…  ரெண்டு தடவையும் டுவின்ஸ் பேபிஸ்…" என்று அந்த புதியவன் பெருமையுடன் சொல்ல, 

 

"ரொம்ப ஓவர்டைம் பார்த்து தேவைக்கு மீறியே  நாட்டோட ஜனதொகையை பெருக்கியிருக்கீங்க சார்… இந்த ஒரு  சாதனைக்காகவே உங்களுக்கு நான் ஏதாவது பரிசு தரணுமே…" என்று யோசிப்பது போல் பாவனை செய்த பிரபு, மற்றவன் சுதாரிக்கும் முன் கத்தியின்றி ரத்தமின்றி இனி எந்த பொண்ணையும்,  ஏன் அவன் மனைவியையே தொட முடியாத அளவிற்கு தனது பாணியில் பரிசு கொடுத்திருந்தான்…

 

இதை எதையும் அறியாத ரஞ்சனி தன் வாழ்வில் கடந்து வந்த சில கசப்பான சம்பவங்களால், ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையும் சபித்தபடி, ஜெனி தடுத்தும் கேளாமல் ஓர் ஆட்டோ பிடித்து தனது அப்பார்மெண்ட்க்கு வந்து சேர்ந்தாள்… 

 

இன்றும் அவன் மீதிருந்த கோபத்தில் வீம்புடன் அமர்ந்திருந்தவள், "அவன் முதல்ல கூப்பிடட்டும் அப்புறமா  நாம உள்ளே போய் ஒரு அட்டனஸ்ஸை போடலாம்…" என நினைத்தபடி அவள் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் நேரம், ஒருவன் அவளை கடந்து சென்றதை ரஞ்சனி கவனிக்கவில்லை

 

சிறிது நேரத்தில் தன் முன் நிழலாடவும் யார் என்று நிமிர்ந்து பார்த்த ரஞ்சனி, ஜெனியின் கோப முகத்தைக் கண்டு புரியாமல் என்ன என்பது போல் புருவம் சுருக்கி அவளை பார்த்தாள்.

 

"உன் மனசுல என்னடி நினைச்சிட்டு இருக்க…? போன் பண்ணா எடுக்க மாட்டியா…? நேத்து தனியா ஆட்டோல போனீயே பத்திரமா வீடு போய் சேர்ந்தியா  இல்லையான்னு ரொம்ப டென்ஷன் ஆகி உனக்கு போன் பண்ணா ஸ்வீட்ச் ஆப்ன்னு வருது… சரி ஆபிஸ் வந்ததும் போனை ஆன் பண்ணுவன்னு பார்த்தா அப்பவும் பண்ணல… நீயெல்லாம் எதுக்குடி போன் வச்சிருக்க… தூக்கி குப்பையில போடு…" என்று அவள்  மீது கொண்ட அக்கறையில் படபடத்துக் கொண்டிருந்தவளை பார்த்து புன்னகை புரிந்த ரஞ்சனி…

 

"சாரி ஜெனி வீட்டுக்கு போனதும் உனக்கு போன் பண்ணணும்ன்னுதான் நினைச்சேன்… பட் பேட்டரி டவுன் ஆகிடுச்சு… உனக்கே தெரியும்  கோபம் வந்தா எனக்கு நல்லா பசிக்கும்ன்னு… நந்து சுட்ட ஸ்பெஷல் தோசையை வெளுத்து வாங்கினதுல உன்னை மறந்துட்டேன்…" என்று கெஞ்சலாக கூறியவளுக்கு மட்டுமே தெரியும் எதனால் அவளது போன் அணைத்து வைக்க பட்டிருந்தது என்று… 

 

அதைக் கேட்டு மேலும் அவளை முறைத்த ஜெனி… "உன்னை திருத்தவே முடியாதுடி…" என்றபடி தன் தலையில் அடித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகல, சிரிப்புடன் தன் கைபையில் இருந்த மொபைலை எடுத்த ரஞ்சனியோ அதை உயிர்பித்ததும்தான் தாமதம் ராஜேஷ்ஷிடமிருந்து பல அழைப்புகள் அவளுக்கு வந்திருந்தது… 

 

எதற்கு என்று புரிந்தாலும் தங்கையின் மீதிருந்த கோபம் அவனுக்கு அழைத்து பேச தடை விதித்தாலும், ராஜேஷ்ஷின் மீதிருந்த மரியாதை அவனுக்கு திரும்ப அழைக்க தூண்டியது… அதனால்  தன் மொபைலில் இருந்து அவனது எண்ணுக்கு அழைப்பு விடுக்கும் நேரம் அவளது மேஜையில் இருந்த டெலிபோன் ஒலியெழுப்ப, அதை எடுத்து அட்டன் செய்தவள் "ஹலோ ரஞ்சனி ஹியர்…" என்றாள்.

 

"கொஞ்சம் வரீங்களா...? என்ற பிரபுவின் விஷமமான அழைப்பில் கொதித்தெழுந்தவள் "வாட்..." என்று கத்தினாள்… 

 

அவள் கத்திய காட்டு கத்தலில்... தனது காதில் இருந்து போனை தள்ளி பிடித்த பிரபு தன் ஆள்காட்டி விரலால் அந்த காதை தேய்த்து கொண்டவன்.. போனை மறு காதிற்கு மாற்றி வைத்து "எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க  மிஸ் ரஞ்சனி புது பிராஜெக்ட் ஒன்னு வந்திருக்கு அது விஷயமா பேசணும் சோ என் கேபினுக்கு வரீங்களான்னு கேட்டேன்… நீங்க என்ன நினைச்சீங்க…?" என்று நமுட்டு சிரிப்புடன் அவன் கேட்கவும், அதைக் கேட்டு பல்லை கடித்த ரஞ்சனியோ "வரேன்… வந்து தொலைக்கிறேன் " என்றபடி  எழுந்து சென்றவள், அவனது கேபின் கதவை திறந்துக் கொண்டு புயலென உள்ளே சென்றாள்…

 

அவளது கோபமுகத்தை ஒரு வித ரசனையுடன் பிரபு  பார்த்திருக்க, அதைக் கண்டு மேலும் கடுப்பான ரஞ்சனி அவனை திட்ட வாயை திறக்கும்முன், அந்த அறையில் தங்களை சுவாரஸியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு திகைத்தாள்… 

 

"கனவில் வரம் தரும்

என் தேவதையே…!!!

நினைவில் என்னை

தள்ளி நிறுத்துவது

ஏனோ…?" 

 


Ramya11, Chitra Balajii, Unknown and 3 people liked
Quote
(@punitha)
Trusted Member
Joined: 2 years ago
Posts: 83
 

ஆதிக்கு ஆட்டிசமா🥺

ம்ம்.. அவங்களை கவனிச்சுக்க ரொம்பவே பொறுமை தேவைப்படுமில்ல😥😥

அது நந்தினிக்கு இருக்கும் போல😅

ஆனா ரஞ்சனிக்கு?????🤭

பிரபு என்ன சொல்ல வராங்கறதைகூட புரிஞ்சுக்க முடியாத கோவக்காரியா இருக்காளே🤦🤦

இதுல இந்த பயபுள்ள வேற அவளை கடுப்பேத்துற மாதிரியே பேசி வைக்குது😂😂😂

ம்ம்.. அவன்கிட்ட வேலை பாத்துக்கிட்டே அவனை கொஞ்சமாச்சும் மதிக்கறாளா பாரு🤦

ஒருவேளை நம்ம பிரபு கனவுல வர காரிகை இவதானோ😁😁😁


(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

@punitha

தேங்க்யூ புனிதா😍😍😍

ரஞ்சனி கோவக்காரின்னா நந்தினி அழுத்தம் அவளும் சளைச்சவ இல்ல... ரஞ்சனி மதிக்காம இருக்கான்னா பிரபு தான் ஏதாவது பண்ணியிருப்பான்...🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

 


punitha and Unknown liked
ReplyQuote
(@unknown)
Eminent Member
Joined: 2 years ago
Posts: 39
 

Aathikku  autism ahh😳😳😳😳 nandini   porumaiyaa patthitalum porumaiya vilaikku ketkkum ranjani kooda avana care pannrathu superr🤗🤗🤗🤗 appo prabhu & ranjani tha jodiyaaa🙄🙄🙄🙄🙄asaltta vela ya mudikkira prabhu semma pongha mohimaa🤣🤣🤣🤣🤣🤣🤣


(@chitra-balajii)
Active Member
Joined: 2 years ago
Posts: 10
 

Super Super Super maa... Semma semma episode.... ஆதி special child ah avan school laye தான் நந்தினி yum velai paakuraala.... Ranjini ah 😊 😊 😊 😊 😊 romba azhaga எழுப்பின..... பிரபு oda office pa தான் velai paakuraala ரஞ்சி party la ava friend ah ஒருத்தன் thappaa pesinathu தாங்காமல் அவன் kita சண்டை ku pogum பொது பிரபு வந்து தடுத்து அவன் kita kovam படாமல் pesinathu avaluku semma கோபம்..... But avana semma கவனிப்பு kavanichi anupinaanu avaluku theriyala.... So madam ku kovam... ராஜேஷ் ethuku அத்தனை vaati call panni irukaaru....பிரபு oda room la யாரு இருந்ததது ethuku ava avana பாத்து thigachi poita... Super Super Super maa... Eagerly waiting for next episode 


(@punitha)
Trusted Member
Joined: 2 years ago
Posts: 83
 

@mohana-karthik

அந்த பையனை பாத்தா அப்படியா தெரியுது🙄🙄

அவன் நல்லவன்..

எங்க ஃபோகஸ் அவன்மேல் போய்ருமோன்னு இப்படி டைவர்ட் பண்ணப்படாது😏😏🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️


(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

@chitra-balajii

Thank you chitra 😍😍😍😘😘😘


ReplyQuote
(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

@saranya-srinivas

Thank you saranya 😍😍😍


ReplyQuote
Share:
6
6