Views 1,502,876 

Notifications
Clear all

கனவுகள் 1

Page 1 / 2

(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

மோகனா கார்த்திக்கின்,

"கொஞ்சம் கனவுகள்…!!!  கொஞ்சும் நினைவுகள்…!!!

 

ஓம் சாய் ராம் 

 

கனவு 1

 

உலகில் அழகு வாய்ந்த நகரங்களில் பாரிஸ்க்கு அடுத்தப்படியாக உள்ள மும்பை நகரம் அந்த அர்த்த ராத்திரியிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது… முன்பு பம்பாயாக இருந்த மும்பை, இந்திய மாநிலமான மகாராஷ்ராவின் தலைநகரமாகும்…மும்பை என்றாலே நம் நினைவுக்கு வருது பாலிவுட்… கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

திரைபட நட்சத்திரங்கள், அதிகமாக வசிக்கும் மும்பை மாநகரத்தில் இரவு நேர கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை… 

 

மும்பையின் வாழ்க்கை முறையில் புதிதாக புகுந்திருக்கும் நவீனம் அங்குள்ள மக்களை எப்பொழுதும் சுறுசுறுப்பான வைத்திருக்கும் அதே நேரம் அந்த மாநகரத்தின் ஓர் பகுதியில் அமைந்துள்ள பன்னிரண்டு மாடியை கொண்ட ஓர் அப்பார்ட்மெண்ட்டின்  எட்டாவது மாடியில் உள்ள ஓர் அறையில், 

 

"பூவனத்தில் மரமுண்டு

மரம் நிறைய பூ உண்டு

பூ நிறைய தேன் உண்டு

பூப்பறக்க போவோமா

பூமகனே கண்ணே வா…"

 

இனிமையான குரலில் அவள் பாட, அதைக் கேட்டு, ஆழந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான் பத்து வயதான அவளின் தம்பி ஆதவன்.

 

பிறந்ததில் இருந்தே தாயின் தாலாட்டுப் பாடல் கேட்காமல் அவனுக்கு என்றுமே உறக்கம் வந்ததில்லை… தாயின் முந்தானையை இடது கையில் சுருட்டி பிடித்துக் கொண்டு, வலது கை கட்டை விரலை வாயில் சூப்பிக் கொண்டு, தாலாட்டை கேட்டபடி  அப்படியே உறங்கிவிடுபவன், 

 

கடந்த இரண்டு வருடங்களாக தாயின் மறைவிற்கு பின் அந்த பாடலை பாடினால்தான் நான் தூங்குவேன் என அடம்பிடிக்கும் தம்பியை முதலில் சமாளிக்க தெரியாமல் தடுமாறினாள் அவள். பின்பு தானே அவனுக்கு தாயாக மாறிப் போக,   

தமக்கையின் முந்தானையை பிடித்துக் கொண்டு அவளின்  இனிமையான குரலைக் கேட்டு தினமும் உறங்க பழகிக் கொண்டான்… 

 

ஆதவன்  மட்டும் அல்ல அந்த பாடலை பாடிக்கொண்டிருந்தவளும்   

தன் சிறுவயதில்  அந்த தாலாட்டை கேட்டுத்தான் கண்ணயர்வாள்… அன்னையின் இழப்பு அவளையும் மனதளவில் பெரிதாக பாதித்து இருந்ததாலும், தன்னை விட வயதில் சிறியவனான தனது தம்பி தாய்பாசம் இல்லாமல் ஏக்கம் கொண்டு துவண்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாள். 

 

ஆதவனே அவளது  வாழ்வின் ஆதியும் அந்தமும் என எப்பொழுது மாறிப் போனானோ அன்றில் இருந்தே தனது கனவு, ஆசை, வாழ்க்கை எல்லாவற்றையும் துறந்து இதோ அவனுக்காக மட்டுமே வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்…

 

என்னதான் தன் தம்பிக்கு அன்னையாக மாறி அவனை நன்றாக பார்த்துக் கொண்டாலும் இரவு நேரத்தில் அந்த தாலாட்டு பாடல் பாடும் போது அவளது மனமோ ரணமாக வலிக்கும்…  

 

ஆனால் தாயிற்கு பிறகு தம்பி தங்கைகளை அவரிடத்தில் இருந்து தான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் தனது துக்கங்களை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு வெளியே சிரித்த முகமாக நடமாடிக் கொண்டிருக்கிறாள் அவள்… 

 

அவள் பெயர் நந்தினி… ஐந்தரை அடி உயரத்தில்,  பிரம்மன் படைத்த மென்மையான பூக்குவியல் அவள்… யாரிடமும் அதிர்ந்து பேசாத குணம் கொண்டவளாக இருந்தாலும், அழுத்தம் நிறைந்தவள்… அவள் மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும் வெளியே எப்பொழுதும் புன்னகை முகமாகவே காட்சியளிப்பாள்… 

 

அவளது அந்த சிரிப்பு கண்ணுக்கு எட்டாமல் உதட்டளவில்தான் இருக்கும்… அதற்கு தாயின் திடீர் மரணம் மட்டும்தான் காரணமா என்று  கேட்டால் அதற்கு அவளிடமிருந்து வெளிபடுபவது மௌனம் மட்டுமே… 

 

புரியாத புதிர் அவள்…! அந்த புதிரின் முடிச்சை அவிழ்க்க வருவான் ஒருவன்… அவள் ஆழ்மனதின்  புதைக்கப்பட்ட அவனின் நினைவுகளை தட்டி எழுப்பி, இதுநாள்வரை கனவில் அவனுடன் வாழ்த்துக் கொண்டிருப்பவளை நிஜத்தில் கைபிடிப்பான் அவன்…!

 

இதோ இப்பொழுதும் கூட அவனுடனான கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை வீட்டின் அழைப்புமணி ஒலித்து அவளை நனவுலகத்திற்கு  வரவழைக்க, லேசான உறக்கத்தில் இருந்தவள் சட்டென கண்விழித்தாள். வந்திருப்பது யார் என்று புரிந்ததும் ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்றவள் கதவை திறந்தாள். 

 

அங்கே வெளியே நின்றிருந்த தனது தங்கை ரஞ்சனியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைக் கண்டு அவள் கோபத்தில் இருக்கிறாள் என்பதை சரியாக புரிந்துக் கொண்ட நந்தினியோ  அமைதியாக அவளுக்கு வழிவிட்டு நின்றாள்… 

 

உள்ளே வந்த ரஞ்சனி,  யார் மீதோ இருந்த கோபத்தை தன் காலணி மீதும் கைபையின் மீதும் காட்டிவிட்டு, பின் தன் தமக்கையின் முகத்தை பார்க்காமல் "எனக்கு ரொம்ப பசிக்கிது… சாப்பிட ஏதாவது இருந்தா எடுத்து வை… நான் பிரெஷ் ஆகிட்டு  வந்திடுறேன்…" என்றவள் நேராக தனது அறைக்குள் செல்ல, திகைப்புடன் தங்கையை பார்த்தாள் நந்தினி…

 

'இன்னைக்கு ஒரு பார்ட்டி இருக்கு… நைட் அங்கதான் சாப்பிட்டு வருவேன்னு சொன்னாளே… ஏன் என்னாச்சு அங்க சாப்பிடலயா…?" என்று கேட்க துடித்த வார்த்தைகளை உடனே அடக்கிக் கொண்டாள்…

 

ஏனெனில் சாப்பாடு விஷயத்தில் தனது தங்கை கூச்சநாச்சம் பார்க்க மாட்டாள் என்று அவளுக்கு நன்றாக தெரியும்…  கோபமோ, சந்தோஷமோ எந்த உணர்வாக இருந்தாலும் அவள் முதலில் நாடிச் செல்வது உணவை நோக்கிதான்… அதுபோல் பார்ட்டியில் இருந்து வருபவள் வெறும் வயிற்றோடு வந்திருக்க மாட்டாள்…  இருந்தும் வயிறு பசிக்கிறது என்று சொல்கிறாள் என்றால்…? அது யார் மீதோ உள்ள கோபத்தை குறைத்துக் கொள்ள எண்ணி கேட்கிறாள் என்று சரியாக யூகித்த நந்தினியின் இதழில் புன்னகை மலர, குளிர்சாதன பெட்டியில் இருந்த தோசைமாவை எடுத்துக் கொண்டு  சமையல் அறையை நோக்கி செல்ல, ரஞ்சனியோ தன் கபோர்டில் இருந்த இரவு உடையை எடுத்துக் கொண்டு நேராக குளியல் அறையை நோக்கி சென்றாள்… 

 

குளித்து முடித்து வெளிய வந்தவளுக்கு சூடான தோசைகளுடன்  மதியம் வைத்த சாம்பாருடன் நந்தினி பரிமாற… ரஞ்சனியோ அதை ரசித்து சாப்பிட்டபடி  "நந்து சூப்பரா இருக்கு தோசை… சும்மா மொறு மொறுன்னு செம முறுகலா இருக்கு" என்றவள்  கணக்கு வழக்கு இல்லாமல் அதை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்…

 

தங்கையின் வயிறு ஓரளவு நிறைந்தும்,  அவளது முகம் கடுமையில் இருந்து சற்று மென்மையாக மாறியதைக் கண்ட நந்தினி,  இதுதான் சரியான சமயம் என்றெண்ணியவள், தன் தங்கையிடம் ஏதோ கேட்க வர, அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனியோ, "போதும் நந்து இதுக்குமேல சாப்பிட்டா என் வயிறு வெடிச்சிடும்… " என்றபடி  என தனது தட்டில் இருந்த கடைசி தோசையை காலி செய்துவிட்டு வாஷ்பேஸினில் கையை கழுவிக் கொண்டு அவசர அவசரமாக தனது அறையை நோக்கி செல்ல முயன்றாள் 

 

தங்கையின் செயலில் கடுப்பான நந்தினியோ அழுத்தமான குரலில் ."ரஞ்சி நில்லு…" என்று கூற,  தமக்கையின் அந்த குரலில் சட்டென நின்ற ரஞ்சனி, நிதானமாக திரும்பி கையை கட்டிக் கொண்டு என்ன என்பது போல்  அவளை பார்த்தாள்.  

 

"நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல… ஒரு வாரமா உன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கேன்… எந்த பதிலும் சொல்லாம இன்னமும் இப்படி  அடமா இருந்தா என்ன அர்த்தம்…? என்று கண்டிப்புடன் கேட்டாள் நந்தினி. 

 

தமக்கையை அதே அழுத்தத்துடன் பார்த்த ரஞ்சனியோ  "அமைதியா இருக்கேன்னா பதில் சொல்ல விருப்பமில்லன்னு அர்த்தம்… அடமா இருக்கேன்னா எனக்கு அங்க வர பிடிக்கலன்னு அர்த்தம்…" என்றாள்.

 

"ம்ப்ச்… ஏன் இப்படி புரிஞ்சிக்காம பேசுற ரஞ்சி… சாந்தினி  யாரு நம்ம தங்கச்சிதானே… அவளுக்கு ஒரு நல்லது நடக்கும் போது நாம கூட இருக்கணும்ன்னு  அவளுக்கு ஆசையிருக்காதா…" என்று கேட்டு முடிக்கும் முன்பே  

 

"அப்படின்னு அவ உன்கிட்ட சொன்னாளா…" என பட்டென கேள்வி பிறந்து வந்தது  ரஞ்சனியிடமிருந்து…

 

தங்கையின் கேள்வியில் சிறிது நேரம்  மௌனமான நந்தினி… "அவ சொல்லலைதான்… ஆனாலும் அவ முன்ன மாதிரி இல்ல ரஞ்சி… உறவுகளோட அருமையை புரிஞ்சிகிட்டா…" என்றதும்

 

"எப்ப இருந்து வந்ததாம் அவளுக்கு இந்த ஞானோதயம் …" என்று நக்கலாக கேட்டாள் தங்கை…

 

அவளின் கேள்வியில் சற்று சலிப்படைந்த நந்தினியோ "நீ விதண்டாவாதம் பண்ற ரஞ்சி… சாந்தினி முன்ன வேணா நம்மளை எடுத்தெறிஞ்சி பேசியிருக்கலாம்… ஆனா இப்ப அவ ஒரு குழந்தைக்கு அம்மா ஆகப்போறா… அவ வாழ்க்கையில நடக்கிற முக்கியமான நிகழ்ச்சி இது … அதுக்கு நாம போகலன்னா எப்படிம்மா…?  இந்நேரம் அம்மா இருந்திருந்தா சும்மா இருந்திருப்பாங்களா…? அவளுக்கு என்ன செய்யணுமோ முறைப்படி செஞ்சிருப்பாங்கதானே…" என்று பொறுமையாக தங்கைக்கு புரிய வைக்க முயன்றாள்…

 

'அம்மா இருந்திருந்தாதான் உனக்கும் எனக்கும் இந்த நிலைமையே வந்திருக்காதே…' என மனதில் நினைத்தவளுக்கோ தாயின் நினைவில் கண்ணோரம் சிறு துளி எட்டி பார்க்க, அதை சட்டென தட்டிவிட்டவள், 

 

"இப்ப என்ன…?  சாந்தினிக்கு வளைகாப்பு சீர் செய்யணும் அவ்ளோதானே… சரி உன் ஆசைப்படியே நீ போய்  செஞ்சிட்டு வா… ஆனா தயவு செய்து நானும் வரணும்ன்னு என்னை கட்டாயபடுத்தாதே… அதே மாதிரி ஆதியும் வரமாட்டான்… இங்க  என்கூடத்தான் இருப்பான்… அங்க கூட்டிட்டு போய் எல்லாரும் அவனை பயித்தியகாரன் மாதிரி டிரீட் பண்றதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது…" என கோபத்துடன் அவள் கூறினாள்.

 

"மத்தவங்களை பத்தி நாம ஏன் கவலை படணும் ரஞ்சி… நம்மளை இன்வைட் பண்ணது ராஜேஷ்… அவர் முகத்துக்காவது நீயும் …" என நந்தினி கூறும் முன்பே தன் கை நீட்டி அவளை பேச விடாமல் தடுத்தவள், "சாரி நந்து என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல… ராஜேஷோட நல்ல மனசுக்காகத்தான் உன்னைக்கூட அங்கே போக நான் அலோவ் பண்றேன்…மத்தபடி அவரை தவிர அந்த வீட்டு மனுஷங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கல…" என்றவள், 

 

"நீ என்னைக்கு கிளம்ப போறன்னு சொல்லு டிக்கெட் புக் பண்றேன்…" என்றவள் அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் தனது அறைக்கு சென்றுவிட, தங்கையின் கோபத்தில் இருந்த நியாயத்தை புரிந்துக் கொண்ட நந்தினிக்கும் அவளை எப்படி சம்மதிக்க வைப்பது என்று புரியவில்லை… 

 

இருந்தாலும் கிளம்பும் தறுவாயிலாவது தங்கையின் மனது மாறக்கூடும் என்ற நம்பிக்கையுடன், தானும் தனது அறைக்கு சென்றவள்  ஆதவனை அணைத்துக் கொண்டு உறங்க நினைக்க, மூடிய இமைகளுக்குள் வந்து இம்சித்தான் அவன்… ஓர் கட்டத்தில் அவளது உடல் ஓய்வுக்கு கெஞ்ச  விழிகளுக்குள் இம்சித்தவனை இதயத்தில் சென்று இருக்குமாறு கூறியவள் அடுத்த நிமிடம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்…

 

*********

 

கண்களுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் காரிருள் சூழ்ந்திருக்க, அந்த இருளில் தன்னவளை தேடி அலைந்துக் கொண்டிருந்தான் அவன்…  கண்ணிருந்தும் குருடனாய், தும்பை விட்டு வாலை பிடிப்பது போல இருந்தது அவனது செயல்… அவள் விரும்பி வரும்போது விலகி சென்றவன்… இப்பொழுது அவள்தான் வேண்டும் என்ற உறுதியுடன், தனக்கான எதிர்காலத்தை இந்த இருளில் தேடிக் கொண்டிருக்கிறான்… 

 

அவனது தேடலுக்கு பலனாய் சிறிது நேரத்தில், "பிரபுஊஊஊ…" என்ற மனதை மயக்கும் இனிமையான குரல் டகேட்க, குரல் வந்த திசையில் இதயம் படபடக்க, சட்டென திருப்பி பார்த்தான். 

 

அந்த தேன்குரலுக்கு சொந்தக்காரியான  தனது தேவதையின் மதிமுகம் காண ஆவல் கொண்டவன்,  தன் கண்களை நாலாபுறமும் அலைபாய விட்டான்… ஆனால்  எங்கு தேடியும் அந்த தேவதையின் மதிமுகம் தெரியாததால் அவன் மனம் சுணக்கம் கொண்டதில் அவனது முகம் ஏமாற்றத்தில் கவிழ்ந்தது…

 

அவனது முகவாட்டம் அந்த  தேவதைக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, அதுவரை இருளில் அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தவள் தன்னை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பொருட்டு தன் கையில் வைத்திருந்த மெழுகுவர்த்தியை சட்டென ஔியூட்டினாள்.

 

"ஒளியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீயில்லையா

இது நெசமா நெசம் இல்லையா

நெனவுக்கு தெரியலையா

கனவிலே நடக்குதா

கண்களும் காண்கிறதா காண்கிறதா…"

 

இருளின் கருமையில் ஔியின் துணையுடன் தேவதையாய் காட்சி தந்த தன்னவளை கண்டவனின் மனம் தாளம் தப்பியதில், அவளை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான் அவன்…  தன் எதிரே அழகு சிற்பமாய் நின்றிருந்த தன்னவளை அணைத்து தன்னுள் அடங்கியிருக்கும் கரைகாணா காதலை அவளிடம் காட்ட அவன் மனம் துடித்தாலும், பாவையவளின் மனதை அறிந்திடாமல் தன் சுண்டுவிரல் கூட அவள் மீது படக்கூடாது என நினைத்து தனது தேவதையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் .(அவ்ளோ நல்லவனாடா நீ)

 

அவனின்  கண்ணில் தெரிந்த ஏக்கத்தை கண்டுகொண்டவளோ, தனது ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி "பிரபுஊஊஊ…"

என அழைத்ததோடு மட்டுமல்லாமல் ஆள்காட்டி விரலை அவனை நோக்கி நீட்டி,  பின்பு மடித்து "வா…" என்பது போல் அவனை அழைத்தாள்… 

 

தன்னவளின் அழைப்பிலும், அவளது ஹஸ்கி குரலும் கேட்டு  பிரபுவின் கண்கள் மின்னினாலும், அவனது ஏழாவது அறிவு அவனுக்கு  எச்சரிக்கை மணி அடித்து நிதர்சனத்தை உணர்ந்த சற்று நிதானித்தான்.

 

முதலில் அவள் அழைப்பது தன்னைத்தானா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும் பொருட்டு  தனக்கு பின்னால் யாரும் இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தான்… அவனது செயல் பெண்ணவளுக்கு சிரிப்பை வரவழைக்க கிண்கிணி நாதமாய் சிரிப்பொலி எழுப்பினாள்... 

 

அதில் தன்னை மறந்து அவளது சிரிப்பை ரசித்து பார்த்தவனை முன்பு போல் ஆட்காட்டி விரலை நீட்டி  "உங்களைத்தான் கூப்பிட்டேன் பிரபு … என்கிட்ட வாங்க …" என்று மீண்டும் அழைக்க, இப்பொழுதும் அவனது ஏழாவது அறிவு எச்சரிக்கை மணி அடித்து நிதர்சனத்தை உணர்த்த விரும்பியது… 

 

ஆனால் அவனோ  அதை கண்டுகொள்ளாமல், "அமுல் பேபி… " என அவளுக்கு குறையாத காதலுடன் முணுமுணுத்தவன் நொடியும் தாமதிக்காமல் அவளை நோக்கி சென்றான்.

 

தன்னை காதலுடன் நெருங்கி நின்றவனின்  எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அவனது முகத்தை வலது கையால் தாங்கி பிடித்தவள், "ஐ லவ் யூ பிரபு…" என்றாள்…

 

இந்த வார்த்தையைக் கேட்க எத்தனை நாட்கள் தன் தூக்கத்தை தொலைத்து தவம் இருந்திருப்பான்… இன்று அந்த வார்த்தையை அவள் வாயால் கேட்டதும் ஆகாயத்தில் பறப்பதைப் போல் உணர்ந்தான் பிரபு… இருந்தும் தான் காதால் கேட்ட வார்த்தைகள்  நிஜம்தானா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும் பொருட்டு, "என்னால நம்ப முடியல அமுல் பேபி…!" என்றான்.

 

காதலனின் மனதை சரியாக படித்த அவனின் காதலியோ, "என்  காதலை எப்படி உணர்த்தினா உங்களுக்கு புரியும் பிரபு…" என்று கேட்டாள்.

 

பிரபுவோ இதுதான் சாக்கென்று, "என்னை கிஸ் பண்ணி உன்  காதலை நிரூபி அமுல்பேபி…!" என்றான் மயக்கத்துடன், 

 

அதைக் கேட்டு அவளது முகம் சிவந்தாலும், தனது காதலை அவன் கேட்ட வழியில் நிரூபிக்கும் பொருட்டு பிரபுவை  நெருங்கி நின்றவள், கால் கட்டைவிரலை ஊன்றி அவனது உயரத்துக்கு எம்ப முயன்றாள்…

 

அந்தோ பரிதாபம் அவளால் முடியாமல் பாவமாக  அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க, பிரபுவோ கள்ள சிரிப்புடன் குறுகுறுவென்று அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் பார்வையில் அவளுக்கு வெட்கம் வந்தாலும் வெளியே அவனை முறைத்து பார்க்க, பிரபுவோ அவளை மேலும் சோதிக்க விரும்பாமல் அவள் உயரத்திற்கு தன் தலையை சற்று தாழ்த்தினான்… 

 

இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது காதலை வெளிபடுத்த, அதே நேரம் இருவரின் இதழ்களும் ஒன்றோடு ஒன்று உரசும் நெருக்கத்திற்கு வந்திருந்தது.

 

தன்னவளின் இதழ் தீண்டலை எதிர்பார்த்து அவன் மயக்கத்துடன் காத்திருக்க… பெண்ணவளும் தன் தயக்கம் துறந்து  அவன் இதழ்தீண்டும் நேரம், 

 

"வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு

அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு

கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு

அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு…" 

 

என்ற பாடல் மிகுந்த சத்தத்துடன் பிரபுவின் மொபைலில் இருந்து ஒலிக்க, அதுவரை கனவுலகத்தில் தன்னவளின் இதழ் ஒற்றலுக்காக காத்திருந்தவன், திடீரென்று கேட்ட சத்தத்தில் அடித்து பிடித்து  அலறி எழுந்தவனின் உடல் குப்பென்று வியர்ந்திருந்தது…

 

சற்று நேரத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்டவன் தன் எதிரே இருந்த கடிகாரத்தை பார்த்தான்… மணி அதிகாலை ஐந்து என்று காட்டவும், அவனுக்கு எல்லாம் புரிந்து போனது… 

 

இதுவரை தான் கண்டது கனவு என்றும்,  ஏழாம் அறிவாக எச்சரித்துக் கொண்டிருந்தது மொபைலின் மெசேஜ் டோன் என்று  வெகு தாமதமாக புரியவர, தன் கனவை எண்ணி தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்… 

 

அப்பொழுது தன் நெற்றியில் அவன் கைகள் உணர்ந்த ஈரத்தைக் கண்டவன், "கனவுல ஒரு முத்தம் கேட்டதுக்கே இப்படி என்னை வேர்வையில முக்குளிக்க வச்சிட்டாளே… இதுவே  நான் அவளை மொத்தமா கேட்டுருந்தா என் உயிரை எடுத்திருப்பா ராட்சஸி…" என தனது விதியை நினைத்து அவன் நொந்துக் கொண்டிருக்கும் நேரம் மீண்டும் அவனது மொபைல் ஒலி எழுப்ப, 

 

'யார்டா அது சரியான நேரத்துல கரடி வேலை பார்த்தது…' என்ற எரிச்சலுடன் தன் அருகிலிருந்த மொபைலை எடுத்துப் பார்க்க, அதில் ஔிர்ந்த பெயரைக் கண்டு,  "நண்பன்தான்…" என்றபடி உடனே அதை அட்டன் செய்த பிரபு "ஹலோ…" என்பதற்குள், எதிர்முனையில் இருந்தவனோ, 

 

"ஏன்டா போனை எடுக்க இவ்ளோ நேரம்…? தூங்கிட்டு  இருந்தியா…?" என்று கேட்கவும், கனவு கலைந்த கடுப்பில் இருந்த பிரபுவோ, 

 

"நல்ல உறக்கத்துல இருந்த என்னை போன் போட்டு எழுப்பிட்டு,  தூங்கிட்டு இருந்தியா கேள்வி கேட்குற பார்த்தியா …? ரொம்ப நல்லவன்டா நீ… " என்றவனின் குரலில் இருந்த எரிச்சலை புரிந்துக் கொண்டவனின் இதழோ புன்னகை புரிந்தது.

 

"சாரிடா கனவுல யார்கூடயாவது டூயட் பாடிட்டு இருந்தியா…? அதை நான்  டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ …?" என்று அவன் சரியாக யூகித்து, குறுஞ்சிரிப்புடன் கேட்க, 

 

"டூயட் இல்ல மச்சி... ஸ்ரெய்ட்டா அடுத்த கட்டத்துக்கே   போயிட்டேன்…" என்று புன்னகையுடன் கூறினான் பிரபு

 

நண்பனின் காதலைப் பற்றி அறிந்தவனோ, "அந்த கட்டத்துல முதல் அடியை  எடுத்து வச்சது யாரு…? நீயா… இல்ல…?" என அடக்கபட்ட சிரிப்புடன் அவன் கேட்க, …

 

"ச்சே ச்சே நான் இல்ல மச்சி… என்ன இருந்தாலும் உசுரு முக்கியம்ல்ல…" என்றவன், "அவதான் என்னை கிஸ் பண்ண வந்தா…  அதுக்குள்ளதான் பாட்டை போட்டு, ச்சே போனை போட்டு பிரிச்சிவிட்டுட்டியே …" என்று மீண்டும் அவன் குரலில் எரிச்சல் எட்டி பார்க்க, பக்கென சிரித்துவிட்டான் எதிர்முனையில் இருந்தவன்…

 

"சிரி மச்சான் சிரி … எனக்கும் ஒரு காலம் வரும்… நீ உன் ஆளோட நெருக்கமா இருக்கும்போது இதே மாதிரி நான் கரடி வேலை பார்க்கல என் பேரு வெங்கட் பிரபு இல்லடா…" என அவன் சபதம் செய்யவும், எதிர்முனையில் சிரித்துக் கொண்டிருந்தவன் சட்டென மௌனமானான்… 

 

நண்பனின் அமைதி பிரபுவுக்கு சந்தேகத்தை தோற்றுவிக்க, "என்கிட்ட எதையாவது மறைக்கிறியா நண்பா… உன் பர்சனல் ஸ்பேஸ்குள்ள தலையிடுறன்னு நீ  நினைச்சன்னா என்கிட்ட சொல்ல வேண்டாம்… " என்றவனின் குரலில் நண்பன் தன் மீது வைத்திருக்கும் அக்கறையை உணர்ந்துக் கொண்டவனோ, 

 

"நேரம் வரும்போது கண்டிப்பா உன்கிட்ட சொல்றேன் பிரபு…" என்றவன், 

 

"வர்ற ஞாயிறு  நான் இந்தியா வர்றேன்டா… அதை சொல்லத்தான் உனக்கு கால் பண்ணேன்…" என்றதும்  இரண்டு வருடங்கள் கழித்து நண்பனை நேரில் காணப் போகும் சந்தோஷத்தில் முகம் மலர்ந்த பிரபுவோ, 

 

"சவுண்ட்ஸ் குட் மச்சி… சரி எப்போ மும்பை வர்ற…" என்று அவன்  கேட்கவும், 

 

"நான் நேரா  மும்பைக்குதான்டா வர்றேன்… என்கூட  மேத்யூவும் வர்றான்… சோ நாங்க தங்குறதுக்கு  ஒரு இடம் ஏற்பாடு பண்ண முடியுமா…?" என்று அவன் கேட்க,

 

"எதுக்குடா தனியா வீடு பார்த்துகிட்டு என் பிளாட்லயே நீங்க தங்கிக்கோங்க…" என்று பிரபு கூறவும், அதற்கு மறுப்பு தெரிவித்தவனிடம், "நீ என்கூடதான் தங்குற டாட்…" என்றபடி அத்துடன் அந்த பேச்சை துண்டித்தவன்,  அதன்பிறகு சிறிது நேரம் நண்பனிடம் வேறு சில விஷயங்களை பேசிவிட்டு போனை வைக்கும் நேரம் பொழுது நன்றாக விடிந்திருந்தது… 

 

இதற்கு மேல் எங்கே தூங்குவது என்று நினைத்த பிரபு , சற்று முன் கனவு தந்த தாக்கத்தில் சிறுது நேரம் அதில் மூழ்கினான்… பின்பு என்ன நினைத்தானோ, "காலையில கனவு கண்டா பலிக்கும்ன்னு சொல்லுவாங்களே… நாம வேற பிரம்ம முகூர்த்ததுல  கனவு கண்டிருக்கோம்… அப்போ நிஜத்துல அப்படியொரு சம்பவம் நடக்க சான்ஸ் இருக்கு… எதுக்கும் நம்மாளுகிட்ட சாம்பிள்காக ஒரு பிட்டு போட்டு பார்க்கலாம்…' என நினைத்த பிரபு குதூகலத்துடன் தன் மொபைலை எடுத்து, 

 

"வாடகை வாடகை என்னடி வாடகை

உன் மன வீட்டுக்குள் உக்கார 

என்னையே கேட்டாலும் இந்தான்னு தந்து ஒட்டிப்பேன் அட்டை போல் உன்கூட

வண்ணப் புதையலா உன்னை எண்ணி 

நெஞ்சில் வச்சிருப்பேன் ரொம்ப பத்திரமா 

சின்ன சிரிப்புல என்னை வளைச்சுட்ட

சித்தன்ன வாசலில் சித்திரமா

 

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு

வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு

நச்சு நச்சு நச்சு நச்சு கொடு

ரைட்டா...?

 

என்ற பாடல் வரிகளை அனுப்பிவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்தான்… இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வுதான்… அவன் மனதில் எப்பொழுது காதல் வந்ததோ அன்றில்  இருந்து தினமும் அவள் மீதான காதலை இப்படி பாடல்வரிகளின் மூலம் அவன் வெளிபடுத்துவது வழக்கம் தான் என்றாலும்,

இன்று கனவில் அவள் கொடுத்த முத்தம் அலைபேசியின் வழியாவது கிடைக்காதா என ஏக்கியவன்,  ஓர்வித எதிர்பார்ப்புடன் அவளது பதிலை எதிர்பார்த்தது காத்திருக்க, என்றும் இல்லாத திருநாளாக இன்று உடனே அவளிடமிருந்து பதில் மெசேஜ் வந்தது… 

 

அதை பார்த்து  சற்று அதிர்ந்தாலும், நேத்து தான் அவளை வெறுப்பேற்றியதற்காகத்தான் இந்த பதில் என புரிந்துக் கொண்டவன்,  அதை தூசு போல் புறந்தள்ளிவிட்டு "என்ன அமுல்பேபி கிஸ் கேட்டா செப்பல் சிம்பல் அனுப்புற….ரைட்டு விடு… என்ன சைஸ்ன்னு சொல்லுடா உடனே வாங்கித் தரேன்…" என்று இளிப்பு ஸ்மைலியுடன் இவன் பதில் மெசேஜ் அனுப்ப, மறுமுனையில் இருந்து சூடாக பதில் வந்தது. 

 

"உனக்கு சூடு சுரணை எதுவுமே கிடையாதா…?" என்று ஆங்கிரி சிம்பளுடன் தாங்கி வந்த  மெசேஜ்ஜைக் கண்டவன்… 

 

"உன்னை லவ் பண்ண பிறகு அதெல்லாம் ஆட்டோமேட்டக்கா காணாம போயிடுச்சு  அமுல்பேபி…" என்று பதில் அனுப்பினான்.

 

மறுமுனையில் அவனின் மெசேஜை  பார்த்தற்கான அறிகுறி தென்பட்டாலும், அடுத்து அடுத்து  அவன் அனுப்பிய மெசேஜ் எதற்கும் பதில் வரவில்லை என்றதும், 

 

"பிளாக் பண்ணிட்டா… இதான் இவகிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்… சரி எப்படியும் இன்னைக்கு வேலைக்கு வந்ததும் பிளாக்கை எடுத்துவிட்டுதானே  ஆகணும்… அப்ப பார்த்துக்கலாம்…" என்றவன் தனது அமுல் பேபியை நினைத்து விசிலடித்துக் கொண்டே குளியல் அறையை நோக்கி செல்ல, 

 

பிரபுவிடம் சற்றுமுன் போன் பேசியவனோ, அமெரிக்காவில்,  லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர பகுதியில் உள்ள ஓர் அப்பார்ட்மென்ட் குடியிறுப்பின் பால்கனியில் நின்றுக் கொண்டிருந்தான்… மாலை மங்கி இருள்  கவிழ்ந்த நேரத்தில், அவன் கண்களோ வானில் மின்னிய நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்… 

 

*விடியும்வரை கனவிலும்,

*விடிந்தபின் நினைவிலும்,

*ஒருநாள் என் வாழ்விலும்,

*நீ வருவாய் என…

*நான் காத்திருக்கிறேன்…!

 

ஹாய் ஹாய் நட்பூஸ்…

எல்லாரும் எப்படி இருக்கீங்க…?

இதோ என்னோட மூன்றாவது நாவலான "கொஞ்சம் கனவுகள் கொஞ்சும் நினைவுகள்…" ளோட உங்களை சந்திக்க வந்துட்டேன்… 

கிட்டதட்ட ஆறு மாதத்திற்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்… நடுவில கொஞ்சம் டச் விட்டு போச்சு மக்களே… உங்களை நம்பித்தான் உங்களோட உற்சாகமான கமென்ட்ஸ் நம்பித்தான் மறுபடியும் திரும்ப வந்திருக்கேன்…

இப்போதைக்கு புதன்கிழமை தோறும்  வாரம் ஒரு எபி தரேன்… கதை எனக்கு சரளமாக எழுத வந்ததும் வாரம் 2 எபி கொடுக்கிறேன்… அது வரை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க நட்பூஸ்… 

உங்கள் கமென்ஸ்ட்ஸ்தான் எனக்கு உத்வேகத்தை கொடுக்கும்… சோ பிலீஸ் ஸ்டிக்கர் போடாம ஒரு வரியிலாவது உங்க கருத்தை சொல்லுங்க… ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருப்போம்.

என்றும் அன்புடன்

உங்கள்

மோகனா கார்த்திக்😍😍😍

 


RajiPrem, J.Annalakshmi, gautami and 8 people liked
Quote
(@punitha)
Trusted Member
Joined: 2 years ago
Posts: 83
 

முதல்ல வாழ்த்துகள் மோகிமா💐💐

திரும்பவும் எங்களை நீங்க சந்திக்க வந்ததுக்கு💝💝

நைஸ் ஸ்டார்ட் 😍

நந்தினியோட கனவில் வந்தவன் யாரோ?

அம்மாக்கு பிறகு அவ மனசை இறுகச்செய்தவனும் அவன்தான்னு நெனைக்கேன்🤔

பிரபு😍😍

பயபுள்ள ஏழாவது அறிவு எச்சரிச்சும் இப்படியா பல்பு வாங்கனும்😂😂

அதிலயும் இவருக்கு லவ் பண்ண அப்றம்தான் சூடு சொரண எல்லாம் போய்ருச்சாமாம்🤭🤭

இதுல இவனோட கை கோர்க்க அந்த பயபுள்ள லாஸ் ஏஞ்சலஸ்ல இருந்து வருது😁😁

வரும் நாட்கள்ல இவங்க எல்லாரோட கனவுகளும் நினைவுகளும் கொஞ்சிக்கற அழகை பாக்க மீ வெய்ட்டிங்😍😍🥳🥳🥳🥳🥳


(@balalakshmi)
Eminent Member
Joined: 2 years ago
Posts: 38
 

super sisy


(@unknown)
Eminent Member
Joined: 2 years ago
Posts: 39
 
  • Lovely  & emotional & suspense ooda starting semma mohimaa💃🏻💃🏻💃🏻💃🏻nandini character oru vithama erukkunna ranjini ooda character ennoru vithama ella erukku🙄🙄🙄🙄 avangha ammavukkum avangha life la enna enna tha nadanthu erukko😲😲😲😲Prabhuuuuuuu😍😍😍😍😍😜😜😜intro ve semma ponghaaa 🤣🤣🤣🤣sekkiramee avanoda kanava nanavaakura velaya seinghaa mohimaa😜😜😜😜😜athum dailyum pattukku pattu sence vera poghuthaa avanukku😂😂😂😂😂😂athu yaaru pera kooda sollatha avanoda friend.. . Athum pata pulla yaara nenacchi evvllloooooo azhagha urukkama love feel pannrrane🤔🤔🤔🤔🤔🤔

(@jailogu)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 150
 

வாழ்த்துக்கள் sis,

 


(@musfithaashraf)
New Member
Joined: 2 years ago
Posts: 1
 

Hai sister.nice start.waiting for next epi.


(@lakshmi)
Eminent Member
Joined: 2 years ago
Posts: 38
 

வாழ்த்துக்கள் மோகனாசிஸ் 🌹 🌹 🌹 

சஸ்பென்ஸ்ஸோடையே ஆரம்பம் சூப்பர் 😍 😍 😍 

நந்தினி கனவு நாயகன்... ரஞ்சினி கோபம்...புதுஆள்... பிரபு காதலி இதை எல்லாம் தெரிஞ்சுக்க வெய்ட்டிங் 


ReplyQuote
(@chitra-balajii)
Active Member
Joined: 2 years ago
Posts: 10
 

Super Super maa... Semma starting.... நந்தினி... Ranjini... சாந்தினி... ஆதி இவங்க brother and sisters ah ஆதி ku enna... ரஞ்சி ஏன் அந்த maari சொன்னா ஆதி ah anga kutikitu pogarathe nu.... சாந்தினி இவங்களுக்கு தங்கச்சி ah இவங்க இருக்கும் pothe ava கல்யாணம் panikitaala.... ரஞ்சி ku enno ava mela romba kovam.... ரஞ்சி ஏன் avvallavu kovam ah வந்தா வெளில இருந்து வரும் pothe.... நந்தினி manasula irukarathu yaaru.....பிரபு friend varaana வெளிநாட்டு la irunthu... பிரபு கனவுல வந்த அமுல் பேபி யாரு.... Super Super Super maa... Eagerly waiting for next episode 


ReplyQuote
(@j-annalakshmi)
Active Member
Joined: 2 years ago
Posts: 17
 

Super epi sister 👍


ReplyQuote
(@mohana-karthik)
Writer Admin
Joined: 2 years ago
Posts: 189
Topic starter  

@punitha

தேங்க்யூ புனிதா😍😍😍

 


punitha liked
ReplyQuote
Page 1 / 2
Share:
6
6