Views 394
“என்னங்க நேரமாச்சு சீக்கிரம் கிளம்புங்க…” என்று தன் கணவனை அவசரப்படுத்தி கொண்டிருந்தாள் சுமதி…
“இதோ கிளம்பிட்டேன் இன்னும் அஞ்சே அஞ்சு நிமிஷம் சுமி…” என்றான் கரண்…
“ம்ம்ம் பொண்ணு நானே சீக்கிரம் கிளம்பிட்டேன் உங்களுக்கு என்னவாம்…” என்று பொய் கோபம் கொண்ட சுமதியின் முகத்தில் தான் எவ்வளவு சந்தோசம் பூரிப்பு… தன் மணி வயிற்றை ஒருமுறை தொட்டு பார்த்து கொண்டாள். அவளிடம் இருந்து பெருமூச்சு வெளியேறியது…
இருக்காதா பின்ன இது அவளின் எத்தனை வருட கனவு, ஆசை.. இதற்காக கோவில் கோவிலாக சென்று விரதம் இருந்து, எவ்வளவு மாத்திரை மருந்து வைத்தியம் என கஷ்டப்பட்டிருப்பாள். அந்த கஷ்டத்திற்கெல்லாம் பலன் இன்று தானே நிறைவேற போகிறது அதனால் வந்த சந்தோசம்… ‘எனக்கும் ஒரு குழந்தை வர போகுது. இனி யாரும் என்னை மலடி என்று அழைக்க மாட்டார்கள் தானே…?’ என்று தனக்கு தானே கேட்டு…? கொண்டாள்..
“சுமி நான் ரெடி போலாமா…”?” என்றபடி வந்தான் அவள் கணவன் கரண்…
“ம்ம்ம் போலாம்ங்க…” என்ற சுமதியின் முகம் திடீரென வாடியது.
“என்னடா என்னாச்சு…” என்று மனைவியின் முகம் பார்த்து அன்பாக கேட்டான் கணவன்…
“என்னவோ தெரியலைங்க ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும், கொஞ்சம் பயமாவும் இருக்குங்க…” என்றாள் தன் மனதை மறைக்காமல்.. மனைவியை தோளோடு அனைத்து கொண்ட கரண்…
“சுமி நிச்சயம் இந்த தடவை நமக்கு நல்லது தான் நடக்கும் நீ கும்பிட்ட கடவுள் நம்மை கைவிட மாட்டார்…” என்று நம்பிக்கை அளித்தான்… இருவரும் கிளம்பினார்கள், அவர்கள் வரவேண்டிய இடம் வந்தது…
“எஸ் யாரை பார்க்கணும்…?” என்று அங்கிருந்த ஒரு பெண்மணி கேட்க…
பயத்தில் சிறு நடுக்கத்துடன் நிற்கும் தன் மனைவியை ஆதரவாக அனைத்த கரண்,
“உங்க கருணை இல்லத்தில் இருந்து எங்களுக்கே எங்களுக்காக ஒரு குழந்தையை தத்தெடுக்க வந்திருக்கோம்…” என்று கூறினான் கரண்…
*****